lic ipo date: மறக்காதிங்க! எல்ஐசி ஐபிஓ: தெரிந்து கொள்ள வேண்டிய 9 முக்கிய அம்சங்கள்

By Pothy RajFirst Published Apr 26, 2022, 12:52 PM IST
Highlights

lic ipo date  :எல்ஐசி நிறுவனம் தனது பங்குகளை மக்களுக்குஅடுத்த மாதம் விற்பனை செய்ய இருக்கிறது. அதற்குரிய தேதி நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக எல்ஐசி ஐபிஓ குறித்து தெரி்ந்து கொள்வது அவசியம்.

எல்ஐசி நிறுவனம் தனது பங்குகளை மக்களுக்குஅடுத்த மாதம் விற்பனை செய்ய இருக்கிறது. அதற்குரிய தேதி நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக எல்ஐசி ஐபிஓ குறித்து தெரி்ந்து கொள்வது அவசியம்.


1.    மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளில் 3.5 சதவீதத்தை 22 கோடி பங்குகளை மட்டும் சந்தையில் விற்பனை செய்ய இருக்கிறது. முதலில் 5 சதவீதம் அதாவது 31.6 கோடி பங்குகள் எனக் கூறப்பட்டநிலையில் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது

2.    மத்திய அரசு 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்து ரூ.21 ஆயிரம் கோடி நிதி திரட்ட இருக்கிறது. முதலில் 5 சதவீதத்தை விற்பனை செய்து ரூ.65ஆயிரம் கோடிவரை நிதி திரட்ட திட்டமிட்டிருந்தது.

3.    எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்பும் பாலிசிதாரர்கள், தங்கள் பாலிசியுடன் பான் எண்ணை இணைத்திருப்பது கட்டாயமாகும். டிமேட் கணக்கும் வைத்திருப்பது கட்டாயம்

4.    எல்ஐசிஐ ஐபிஓ தேதியை உறுதி செய்வதற்காகவே இன்று எல்ஐசி நிறுவனத்தின் நிர்வாகக்குழுவினர் கூட்டம் கூடுகிறது.  இந்தக் கூட்டத்தில் பாலிசிதாரர்களுக்கு எத்தனை சதவீதம், ஊழியர்கள், சில்லரை பங்குதாரர்களுக்கு எத்தனை சதவீதம் ஒதுக்குவது, ஒரு பங்கின் விலை ஆகியவை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் 

5.    எல்ஐசி ஐபிஓ வரும் மே 4ம் தேதி வெளியிடப்பட்டு, மே 9ம் தேதிவரை இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த 5 நாட்களுக்குள் விதிகளுக்குஉட்பட்டு பங்குகளை வாங்கிக்கொள்ள முடியும். 

6.    பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் இதுவரை ரூ.21 ஆயிரம் கோடியை எந்த நிறுவனமும் ஈட்டியதில்லை. அதிகபட்சமாக பேடிஎம் நிறுவனம் ஐபிஓ வெளியிட்டு ரூ.18,300 கோடி ஈட்டியது. எல்ஐசி ஐபிஓ வெளியிட்டால் அதுதான் பெரிதான ஐபிஓவாக இருக்கும்.

7.    எல்ஐசி நிறுவனம் ஐபிஓ விற்பனையில் 10 சதவீதத்தை பாலிசிதாரர்களுக்கும், 5 சதவீதத்தை ஊழியர்களுக்கும், தள்ளுபடி அறிவிப்புகளும் வரலாம்.

8.    எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாகும். 2021, செப்டம்பர் 30ம் தேதி கணக்கின்படி எல்ஐசியின் மதிப்பு ரூ.5.40 லட்சம் கோடியாகும். 

9.    எல்ஐசி நிறுவனத்தில் 13 லட்சம் தனிப்பட்ட பாலிசி ஏஜென்ட்கள், 29 கோடி பாலிசிதாரர்கள் உள்ளனர். காப்பீடு நிறுவனச் சந்தையில் எல்ஐசி நிறுவனம் மட்டும் 61.6 சதவீதப் பங்குகளைப் வைத்துள்ளது. 

click me!