அதானி குழுமம் இந்த பங்குகளை இரண்டாம் நிலை பரிவர்த்தனைகள் மூலம் விற்றது.
அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் குற்றச்சாட்டு காரணமாக அவரின் சொத்து மதிப்பு கணிசமாக குறைந்தது. ஆனால், கௌதம் அதானி தற்போது ஒரே நாளில் ரூ.8700 கோடி சம்பாதித்துள்ளார். ஆம். உண்மை தான்அதானி பவர் லிமிடெட்டின் விளம்பரதாரர்கள், கடந்த புதன் கிழமை அந்நிறுவனத்தின் 31.1 கோடி பங்குகளை விற்றுள்ளனர். சராசரியாக ஒரு பங்கின் விலை 279.17 ரூபாய்க்கு விற்றுள்ளனர், அதன்படி இந்த பங்குகளின் மதிப்பு 8,700 கோடி ரூபாய் என பங்குச்சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. ராஜீவ் ஜெயின் தலைமையிலான GQG ஃபண்ட் நிறுவனம் 5.2 கோடி பங்குகளை ஒரு பங்குக்கு சராசரியாக ரூ. 279.15 என்ற விலையில் இரண்டாம் நிலைப் பரிவர்த்தனைகளின் வரிசையில் வாங்கியது. இதுவரை அதானி குழுமத்தில் ராஜீவ் ஜெயின் நிறுவனம் ரூ.35000 கோடி முதலீடு செய்துள்ளது.
அதானி குழுமம் இந்த பங்குகளை இரண்டாம் நிலை பரிவர்த்தனைகள் மூலம் விற்றது. ஜெயின் நிறுவனம் இப்போது அதானி குழுமத்தின் ஐந்து நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி போர்ட்ஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவை தான் இந்த நிறுவனங்கள். இருப்பினும், ராஜீவ் ஜெயின் நிறுவனம், அதானி குடும்பத்திடமிருந்து வாங்கவில்லை. அவர்களின் பாதி GQG பங்குகளை நிறுவனம் ரூ.4240 கோடிக்கு வாங்கியது. மீதமுள்ள 4.2 சதவீதத்தை இரண்டாம் நிலை சந்தையில் இருந்து வாங்கியதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை வருவதற்கு முன், அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.19.2 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் அறிக்கை வந்த பிறகு அதில் பெரும் சரிவு ஏற்பட்டது. அதன்படி மார்ச் 2ம் தேதி ரூ.7.9 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டது. ஆனால் GQG பார்ட்னர்ஸ் முதலீட்டிற்குப் பிறகு, அது வேகம் பெற்று ஜூன் 28 அன்று ரூ.10.3 லட்சம் கோடியை எட்டியது.
டாடா குரூப் நிறுவனத்தின் அதிக சம்பளம் வாங்கும் 2-வது நிர்வாகி.. இத்தனை கோடி சம்பளமா?
கெளதம் அதானியின் நான்கு நிறுவனங்களான அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் மற்றும் எஸ்இஇசட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றில் ஜெயின் இந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி ரூ.15446 கோடி முதலீடு செய்தார். மே 22 அன்று, நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு ரூ.23,129 கோடியாக இருந்தது, இது முதன்மை முதலீட்டில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஜெயின் பங்குகளை வாங்கியபோது, அதானி குழுமம் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனத்தல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் போராடியது. அதானி குழுமத்தின் பங்குக் கையாளுதல் மற்றும் நிதி முறைகேடு என்று அமெரிக்க நிறுவனம் குற்றம் சாட்டியது. ஆனால், அதற்குள் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பும், கௌதம் அதானியின் நிகர மதிப்பும் சரிந்தன. எவ்வாறாயினும், உச்சநீதிமன்றத்தல் நியமிக்கப்பட்ட குழு ஒன்று, குழுமத்தின் தவறுக்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று அறிவித்தது.
கௌதம் அதானி இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் மற்றும் குஜராத்தின் பணக்காரர். அவர் அதானி குழுமத்தின் தலைவர், அதன் வருவாய் 32 பில்லியன் டாலர்கள். இந்நிறுவனம் 1988 ஆம் ஆண்டு பொருட்கள் வர்த்தக நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இவரது சொத்து மதிப்பு ரூ.4,34,600 கோடி.கௌதம் அதானி ஜூன் 24, 1962 அன்று குஜராத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜவுளி வியாபாரி. அவருக்கு 7 உடன்பிறப்புகள் உள்ளனர். அவர் கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.