எவர்கிராண்டே (Evergrande) என்ற சீன நிறுவனம் அமெரிக்காவில் திவால்நிலை பாதுகாப்புக்காக மனு தாக்கல் செய்துள்ளது.
சீனாவில் ரியல் எஸ்டேட் நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், எவர்கிராண்டே (Evergrande) என்ற சீன நிறுவனம் அமெரிக்காவில் திவால்நிலை பாதுகாப்புக்காக மனு தாக்கல் செய்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் குறித்த கவலைகளை சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தையில் உள்ள பிரச்சனைகள் அதிகரிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது, ஏற்றுமதி குறைந்துள்ளது இளைஞர்களின் வேலையின்மை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக சீனப் பொருட்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததாக கடந்த வாரம் வெளியான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் சீனாவின் எவர்கிராண்டே குழுமம் வியாழன் அன்று சட்டப்பிரிவு அத்தியாயம் 15-ன் கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் திவால் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்தது.
undefined
அத்தியாயம் 15 என்பது ஒரு வெளிநாட்டு நிறுவனம் தனது கடன்களை மறுகட்டமைப்பதில் வேலை செய்யும் போது அந்நிறுவனத்தின் அமெரிக்க சொத்துக்களைப் பாதுகாக்கிறது. 2021 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய எவர்கிராண்டே, வங்கிகளின் தனது ஒப்பந்தங்களை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
எவர்கிராண்டே நிறுவனத்திற்கு சுமார் 300 பில்லியன் டாலர் கடன் இருப்பதாக மதிப்பிட்டப்பட்டுள்ளது. எனவே உலகின் மிக அதிக கடன்பட்ட சொத்து நிறுவனமாக எவர்கிராண்டே உள்ளது. அந்த நேரத்தில், நிறுவனம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது என்ற கவலை உலக நிதிச் சந்தைகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் அந்நிறுவனத்தின் ஹாங்காங்கில் பட்டியலிடப்பட்ட பங்குகள் மார்ச் 2022 முதல் வர்த்தகத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 581.9 பில்லியன் யுவானை இழந்ததாக எவர்கிராண்டே கடந்த மாதம் தெரிவித்திருந்தது. கடந்த வாரம், மற்றொரு சீன சொத்து நிறுவனமான கன்ட்ரி கார்டன், ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு7.6 பில்லியன் டாலர் வரை இழப்பைக் காணக்கூடும் என்று எச்சரித்தது.
இந்தியா தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் உலகளாவிய சாம்பியனாக உள்ளது : மத்திய அமைச்சர் பெருமிதம்
சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தையில் உள்ள சில பெரிய நிறுவனங்கள் நிதி சிக்கலில் போராடி வருகின்றன. இதனால் பல வீடுகள் முன்கூட்டியே விற்கப்படுகின்றன, ஆனால் கட்டுமானம் நிறுத்தப்பட்டால், வாங்குபவர்கள் அடமான கடன்களை வாங்க முடியாது. இது ரியல் எஸ்டே நிறுவனங்களின் நிதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இந்த மாத தொடக்கத்தில், சீனாவின் பொருளாதாரம் சரிந்ததாக சீன அரசு தெரிவித்தது.நுகர்வோர் விலைகள் இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக ஜூலையில் குறைந்துள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. பலவீனமான உலகளாவிய தேவை, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தின் மீட்சி வாய்ப்புகளை அச்சுறுத்தியதால், நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் கடந்த மாதம் கடுமையாக சரிந்தன. அதன்படி ஜூலை மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 14.5% குறைந்துள்ளது என்றும், அதே நேரத்தில் இறக்குமதி 12.4% குறைந்துள்ளது என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வார தொடக்கத்தில், சீனாவின் மத்திய வங்கி எதிர்பாராத விதமாக மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக முக்கிய வட்டி விகிதங்களைக் குறைத்தது. சீன பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.