சீனியர் சிட்டிசன் பிக்சட் டெபாசிட் முதலீடு: அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது?

Published : Nov 27, 2024, 11:03 AM ISTUpdated : Nov 27, 2024, 11:07 AM IST
சீனியர் சிட்டிசன் பிக்சட் டெபாசிட் முதலீடு: அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது?

சுருக்கம்

மூத்த குடிமக்கள் பிக்சட் டெபாசிட் (FD) திட்டத்தின் மூலம் நிலையான வருமானம் ஈட்டலாம். அவர்களுக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது தெரியுமா?

முதலீடுகள் என்று வரும்போது, ​​மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதிய நிதிக்குப் பாதுகாப்பான திட்டங்களையே தேடுகிறார்கள். நிலையான வைப்புத்தொகை எனப்படும் பிக்சட் டெபாசிட் (Fixed Deposits) அவர்களை ஈர்க்கும் பிரபலமான திட்டமாக உள்ளது. FD முதலீட்டில் பணத்திற்கான பாதுகாப்பு கிடைப்பதுடன் நிலையான வருமானத்திற்கும் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள் FD கணக்குகளில், குறிப்பாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தனிநபர்களுக்கான பிக்சட் டெபாசிட் கணக்குகளில் வழக்கமான FD யை விட 0.25% முதல் 0.50% வரை அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இவற்றின் முதலீட்டு காலம் 10 ஆண்டுகள் வரை உள்ளன.

இப்போது நாட்டின் டாப் 10 தனியார் வங்கிகள் வழங்கும் FD விகிதங்களைப் பற்றிப் பார்க்கலாம். சீனியர் சிட்டிசன் பிக்ஸட் டெபாசிட் (Senior Citizen Fixed Deposit) கணக்குகளில் அவற்றின் அதிகபட்ச வட்டி விகிதம் என்ன? 1, 3, 5 ஆண்டுகளுக்கான பிக்சட் டெபாசிட்டில் எவ்வளவு எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்றும் தெரிந்துகொள்ளலாம்.

வங்கி பெயர்அதிகபட்ச வட்டி1 ஆண்டு FD3 ஆண்டு FD5 ஆண்டு  FD
எஸ்பிஎம் வங்கி8.75%7.55%7.80%8.25%
ஆர்பிஎல் வங்கி8.60%8.00%8.00%7.60%
பந்தன் வங்கி8.55%8.55%7.75%6.60%
டிசிபி வங்கி8.55%7.60%8.05%7.90%
இன்டஸ்இண்ட் வங்கி8.25%8.25%7.75%7.75%
யெஸ் வங்கி8.25%7.75%8.00%8.00%
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி8.25%7.00%7.30%7.25%
தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி8.25%7.50%7.00%7.00%
கர்நாடகா வங்கி8.00%7.85%7.00%7.00%
டிபிஎஸ் வங்கி8.00%7.50%7.00%7.00%

(பைசா பஜார் தளத்திலிருந்து)

இந்த வங்கிகள் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த வங்கிகளின் மூத்த குடிமக்களுக்கான FD திட்டங்கள் பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டுக்கு ஏற்றவை.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்