
PM e-Drive திட்டம்
சுற்றுப்புற தூய்மையுடன் கூடிய காற்று மாசு அல்லாத சாலை போக்குவரத்து திட்டத்தை இந்தியா முழுவதும் முன்னெடுத்து செல்லும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்துள்ளது. மின்சார பேருந்துகளின் பயன்பாடு தலைநகர் டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அமலில் உள்ள நிலையில், அதனை நாடு முழுவதும் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காகவே தொடங்கப்பட்டுள்ளது 'PM e-Drive' திட்டம்.
ரூ.10,900 கோடி ஒதுக்கீடு
முதல்கட்டமாக பெங்களூரு, தில்லி, ஹைதராபாத், அஹமதாபாத், சூரத் உள்ளிட்ட நகரங்களுக்கு 'PM e-Drive' திட்டத்தின் கீழ் மொத்தம் 14 ஆயிரத்து 28 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது அதற்காக மத்திய அரசு 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கர்நாடகமாநிலம் பெங்களூருக்கு 4 ஆயிரத்து 500 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் தலைநகர் டெல்லிக்கு 2 ஆயிரத்து 800 மின்சார பேருந்துகள் வழங்கப்பட உள்ளதாகவும் இது டெல்லியில் தனிநபர் போக்குவரத்தை குறைத்து பொது போக்குவரத்தை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்லியின் காற்று மாசு ஓரளவு கட்டுக்குள் வரும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் அஹமதாபாத் மற்றும் சூரத் நகரங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 600 பேருந்துகள் வழங்கப்பட உள்ளன.
பெங்களூரு – 4,500 பேருந்துகள்
தில்லி – 2,800 பேருந்துகள்
ஹைதராபாத் – 2,000 பேருந்துகள்
அஹமதாபாத் – 1,000 பேருந்துகள்
சூரத் – 600 பேருந்துகள்
மிகப்பெரிய மின்சார பேருந்து திட்டம்
இந்த திட்டம், உலகின் மிகப்பெரிய மின்சார பேருந்து திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாக, நகர்ப்புறங்களில் தூய்மையான மற்றும் திறமையான போக்குவரத்தை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது.மத்திய கனிமங்கள் மற்றும் எஃகு துறை அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி, "நாம் வெறும் மின்சார பேருந்துகளை ஒதுக்கவில்லை; இந்தியாவின் போக்குவரத்து அமைப்பின் எதிர்காலத்தை புதுமை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் வடிவமைக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், மின்சார ஆம்புலன்ஸ்கள் மற்றும் மின்சார சரக்கு வாகனங்களுக்கும் தலா ₹500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மருத்துவப் பயணங்களை வசதியாக்கவும், வணிக சரக்கு போக்குவரத்தில் வெளியீடுகளை குறைக்கவும் உதவும். இந்தியாவின் நகர்ப்புற போக்குவரத்தை மின்சாரமாக்கும் இந்த முயற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் bæற்சியமான வளர்ச்சியை நோக்கி ஒரு முக்கியமான படியாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.