
தங்கம் விலையில் இன்று சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக உயர்ந்த நிலையில் விற்பனையாகி வந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. இதன் விளைவாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.71,800 இருந்து ரூ.71,520 ஆக குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹71,520க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் மதுரை, கோயம்புத்தூர், நெல்லையில் ஒரு கிராம் தங்கம் விலை 8,975 ரூபாயாக உள்ளது.கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்களின் முதல் சேமிப்பு, முதலீடு என்று தங்கத்தை மட்டுமே சொல்ல முடியும். எந்த வகையான அவசரமாக இருந்தாலும் தங்கத்தை அடமானம் வைத்து பணம் திரட்டி கொள்ளலாம் என்பதால், மக்கள் நம்பிக்கையுடன் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
திருமண சீசன் துவக்கம்
இன்னும் 2 வாரங்களில் திருமண சீசன் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் தங்கம் வாங்க தொடங்கிவிடுவார்கள். இதனால் தங்கம் விலை குறைந்தால், மக்களிடையே கூடுதல் உற்சாகம் ஏற்படும். நேற்று தங்கம் விலை ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.112க்கு விற்பனையானது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.8,940க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.71,520க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.