crude oil price: கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பணவீக்கம் அதிகரிக்காது: ஜிடிபி 7.8% வளரும்: கிரிசில் கணிப்பு

Published : Mar 11, 2022, 11:05 AM IST
crude oil price: கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பணவீக்கம் அதிகரிக்காது: ஜிடிபி 7.8% வளரும்: கிரிசில் கணிப்பு

சுருக்கம்

crude oil price: 2022-23ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.8 சதவீதமாக வளரும். கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்தாலும், பணவீக்கத்தின் அளவு பெரிதாக அதிகரிக்காது என கிரிசில்(crisil) கடன்தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 2022-23ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.8 சதவீதமாக வளரும். கச்சா எண்ணெய் விலை (crude oil price) சர்வதேச சந்தையில் அதிகரித்தாலும், பணவீக்கத்தின் அளவு பெரிதாக அதிகரிக்காது என கிரிசில்(crisil) கடன்தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தொடரும் பட்சத்தில் பொருட்களின் விலை அதிகரித்து உள்ளீட்டுச் செலவு அதிகரிக்கும்பட்சத்தில் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டு இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், 8.9% ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

கிரிசில் அறிக்கை

கிரிசில் ரேட்டிங் நிறுவனத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் தர்மகீர்த்தி ஜோஷி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2022-23 என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 

உள்கட்டமைப்பு திட்டங்கள்

2022-23ம் நிதியாண்டில்இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8சதவீதம் வளரும் எனக் கணித்துள்ளோம். ஆனால், இந்த இலக்கை எட்டுவதற்கு மத்திய அரசு உள்கட்டமைப்புத் திட்டங்களில் அதிகமான முதலீடு செய்ய வேண்டும், தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதும் அவசியம். இவை இரண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகள். அதேநேரம், ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தொடரும்பட்சத்தில் பொருட்களின் விலை அதிகரித்து உள்ளீட்டுச் செலவு அதிகரிக்கும். அப்போது, பொருளாதார இலக்குகளை எட்டுவதும் கடினமாகும்.

பணவீக்கம்

இந்தியாவில் பணவீக்கம் என்பது கவலைக்குரிய அம்சமாகவே இருந்து வருகிறது. ஆனால், ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் கச்சா எண்ணெய் விலை பேரல் 90 டாலர் வரை சராசரியாக இருந்தாலும், இந்தியாவில் பணவீக்கத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்துக்கு மேல் உயராமல், 5.8% அளவிலேயே இருக்கும்.

அதேநேரம் சர்வதேச சந்தையில் சூழல்கள் பதற்றமாக இருந்து, கச்சா எண்ணெய் விலை குறையாமல் இருந்தால், இந்தியாவின் பொருளதார வளர்ச்சி இலக்கை எட்டுவதும் கடினமாகும்.

இரட்டை இலக்கம்

கடந்த 2012, 2014ம் ஆண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 110 டாலராக இருந்தது. அப்போது இந்தியாவில் பணவீக்கத்தின் அளவு இரட்டை இலக்கத்தில் இருந்தது. ஆனால், அதுபோன்ற சூழல்கள் மீண்டும் வராது. அதிகமான வேளாண் உற்பத்தி, தேவைக்கும் அதிகமான உணவு தானியங்கள் இருப்பதால், பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும். 

கொரோனா பாதிப்பில் ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பையும், நுகர்வையும் அதிகப்படுத்தும் வகையில்  புதியவேலைவாய்ப்புத் திட்டங்களையும் மத்திய அறிமுகம்செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது, நுகர்வு அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும். 

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து  அதிகரித்துவருவதால், நடப்பு நிதியாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2.2%அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலையில் பேரலுக்கு 10 டாலர் அதிகரித்தால், 40 புள்ளிகள் ஜிடிபியில் பற்றாக்குறை ஏற்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்