ஐதராபாத்தில் ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு நான்கு சக்கர வாகன தொழிற்சாலை அமைக்க முன் வந்த சீனாவின் BYD நிறுவனத்திற்கு இந்தியா அனுமதி வழங்கவில்லை.
உலகளவில் அதிக மின்சார வாகனங்களை தயாரித்து விற்பதில், முன்னிலையில் இருக்கும் நிறுவனம் பிஒய்டி. இந்த நிறுவனம் இந்தாண்டில் இந்தியாவில் சுமார் 10,000 முதல் 15,000 மின்சார கார்களை தயாரிப்பதற்கு முடிவு செய்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருந்தது. ஐதராபாத்தில் உள்ள மெகா எஞ்னியரிங் கட்டமைப்பு நிறுவனத்துடன் இணைந்து சுமார் ஒரு பில்லியன் டாலர் முதலீட்டில் நான்கு சக்கர வாகனங்களை தயாரிக்க முன் வந்து இருந்தது.
இதற்காக பிஒய்டி மற்றும் மெகா எஞ்னியரிங் கட்டமைப்பு நிறுவனம் இரண்டும் இணைந்து இந்த மாத துவக்கத்தில் DPIIT எனப்படும் தொழிற்சாலை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தனர். இதுகுறித்து DPIIT துறை மற்ற அரசு சார்ந்த துறைகளிடமும் கருத்து கேட்டு இருந்தது. ஆனால், கருத்துக்கள் சீன நிறுவனத்துக்கு எதிராக வந்துள்ளது. இதற்குக் காரணம் பாதுகாப்பு காரணமாக காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்து இருக்கும் செய்தியில், ''தற்போது இந்தியாவில் வாகன நிறுவனங்களை நிறுவுவதற்கான சட்டங்கள் இதை அனுமதிக்காது'' என்று தெரிவித்துள்ளனர்.
5 லட்சம் முதலீடு செய்தால் 10 லட்சம் கிடைக்கும்.. இரட்டிப்பு லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்
உலகளவில் அதிகளவில் BYD நிறுவனம் வாகனங்களை விற்று வருகிறது. இந்தாண்டில் 10,000 முதல் 15,000 வரை மின்சார கார்களை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுஇருந்தது. ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு மெகா இன்ஜினியரிங் கட்டமைப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சாலை அமைத்தல், பாலங்கள் கட்டுதல், மின்சார கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதம் மின்சார வாகன விற்பனையை எட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மின்சார வாகனங்களை இந்தியாவில் தயாரிப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்சார வாகன தயாரிப்பு மட்டுமின்றி இந்தியாவில் சார்ஜிங் நிலையங்களையும் அமைப்பதற்கு பிஒய்டி திட்டமிட்டு இருந்தது.
BYD ஏற்கனவே இந்தியாவில் முன்னிலையில் உள்ளது. இங்கு Atto 3 எலக்ட்ரிக் SUV மற்றும் e6 எலக்ட்ரிக் செடான் விற்பனை செய்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் தனது முதல் மின்சார காரை அறிமுகப்படுத்த BYD நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் 2020-ல், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தனது அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை மாற்றியது. அண்டை நாடுகளுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் இருந்து வரும் முதலீடுகளுக்கு மத்திய அரசின் அனுமதியை பிரதமர் மோடி அரசாங்கம் கட்டாயமாக்கியது. உள்துறைச் செயலர் தலைமையிலான குழு அத்தகைய பரிந்துரைகளை முடிவு செய்கிறது.
தற்போது உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையாக இருக்கும் இந்தியாவில் உற்பத்தியை அமைக்க திட்டமிட்டுள்ளதாக முன்பு BYD தெரிவித்து இருந்தது. இந்த நிறுவனம் எலான் மஸ்க்கின் டெஸ்லாவுடன் நேரடியாக போட்டியிடுகிறது. டெஸ்லா உலகளாவிய சந்தையில் மின்சார வாகன விற்பனையில் இன்னும் முன்னணியில் உள்ளது.