இந்தியா அமெரிக்க சம்பளத்தில் 1/4 பங்கை எட்டவே 75 வருஷம் ஆகும்: உலக வங்கி கணிப்பு

By SG Balan  |  First Published Aug 3, 2024, 6:59 PM IST

உலக வளர்ச்சி அறிக்கை 2024 என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த அறிக்கையின்படி அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால் பங்கை அடைய இந்தியாவுக்கு 75 ஆண்டுகறுப்பு மேல் ஆகும்.


அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் நான்கில் ஒரு பங்கை அடைய இந்தியாவுக்கு கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆகலாம் என உலக வங்கி தனது சமீபத்திய அறிக்கையில் கூறியிருக்கிறது.

இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகள் அடுத்த சில தசாப்தங்களில் அதிக வருமானம் பெறும் நாடுகளாக மாறுவதில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இந்த அறிக்கை கூறியுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

உலக வளர்ச்சி அறிக்கை 2024 என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த அறிக்கையில், "தற்போதைய போக்குகளில், அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால் பங்கை அடைய சீனாவுக்கு இன்னும் 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். இந்தோனேசியாவுக்கு கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆகும். இந்தியாவுக்கு 75 ஆண்டுகறுப்பு மேல் ஆகும்." என்று கூறப்படுகிறது.

செப்டம்பர் 14 வரை தான் டைம் இருக்கு... இலவசமாக ஆதார் அப்டேட் செய்யும் வாய்ப்பை மிஸ் பண்ணாதிங்க!

"2023ஆம் ஆண்டின் இறுதியில், 108 நாடுகள் நடுத்தர வருமானம் ஈட்டுபவையாக வகைப்படுத்தப்பட்டன. இந்த நாடுகளின் தனிநபர் ஆண்டு வருமானம் $1,136 முதல் $13,845 வரை இருக்கும். இந்த நாடுகளில் ஆறு பில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது உலக மக்கள்தொகையில் 75%. இவர்களிங் மூன்று பேரில் இருவர் தீவிர வறுமையில் வாழ்கின்றனர்" என்று அறிக்கை கூறியது.

மக்கள்தொகையில் வேகமாக அதிகரிக்கும் வயதானவர்களின் எண்ணிக்கை, பெருகிவரும் கடன்கள், தீவிர புவிசார் அரசியல், வர்த்தக பதட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் உள்ள தடைகள் போன்ற சவால்களுக்கு எதிராக இன்னும் தீவிரமாகப் போராட வேண்டியிருக்கும் என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

இன்னும் நடுத்தர வருமானம் ஈட்டும் பல நாடுகள் முதலீட்டை விரிவுபடுத்தும் கொள்கைகளை நம்பியுள்ளன  என்று அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நாடுகள் எதிர்காலத்தில் சவால்களை திறம்பட எதிர்கொள்ளவும் நிலையான பொருளாதார முன்னேற்றத்தை அடையவும் புதிய உத்திகளையும் கொள்கைகளையும் வகுக்க வேண்டும் என்றும் உலக வங்கி அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

வயநாட்டில் 8 மணிநேரம் போராடி பழங்குடியின குடும்பத்தைக் காப்பாற்றிய கேரள அதிகாரிகள்!

click me!