Adani Group: Sebi:கெளதம் அதானி-க்கு குடைச்சல்! பங்கு விற்பனையை ஆய்வு செய்கிறது செபி(SEBI)?

By Pothy Raj  |  First Published Jan 27, 2023, 4:38 PM IST

கெளதம் அதானி குழுமம் பல்வேறு பங்கு மோசடிகளிலும், போலியான கணக்குகள் உருவாக்கி நிதிதிரட்டியது, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதையடுத்து, அதானி குழும பங்குகளை ஆய்வு செய்ய செபி வாய்ப்பு அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன


கெளதம் அதானி குழுமம் பல்வேறு பங்கு மோசடிகளிலும், போலியான கணக்குகள் உருவாக்கி நிதிதிரட்டியது, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதையடுத்து, அதானி குழும பங்குகளை ஆய்வு செய்ய செபி வாய்ப்பு அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

கடந்த ஓர் ஆண்டில் மட்டும் அதானி குழுமத்தின் பங்குகளின் வளர்ச்சியை பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி ஆய்வு செய்ய இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tap to resize

Latest Videos

வழக்குத் தொடுக்கும் அதானி குழுமம்:அமெரிக்க ஹிண்டன்பர்க் நிறுவனம் பதில் என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த புதன்கிழமை அதானி குழுமத்தைப் பற்றிய அறிக்கை வெளியிட்டது. கடந்த 2 ஆண்டுகளாகஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் “ அதானி குழுமம் கடந்த 10 ஆண்டுகளில் பங்குச்சந்தையில் ஏராளமான மோசடியில் ஈடுபட்டுள்ளது.

பங்குகளின் மதிப்பை அதிகப்படுத்திக்காட்ட, வரவு செலவுக் கணக்கை போலியாகத் தயாரித்தல், வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கி பணப்பரிமாற்றம் செய்தல் போன்றவற்றை செய்துள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தது.

இதையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்புகடந்த 2 நாட்களில் மட்டும் 20 சதவீதம் வரை சரிந்தன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துவிட்டது. எந்தவிதமான முழுமையான ஆய்வும் இல்லாமல் அரைவேக்காடு அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க்க நிறுவனத்துக்கு எதிராக இந்தியா அமெரிக்காவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தது.

அதானி குழுமத்துக்கு எதிராக களமிறங்கிய காங்கிரஸ்! ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றி SEBI,RBI விசாரணை தேவை

ஆனால், இதற்கு சட்டை செய்யாத ஹிண்டன்பர்க் நிறுவனம் 2 ஆண்டுகளாகதீவிரமாகஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையை குறைத்து எடைபோதாதீர்கள். அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் அனைத்து ஆவணங்களையும் கேட்போம் என்று பதிலடி கொடுத்தது.

இதனிடையே அதானி குழும பங்குகள் சரிவு, பங்குசந்தையில் இருநாட்களில் ஏற்பட்ட மோசமான சரிவை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கையிலெடுத்துள்ளது. அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறியுள்ள புகார்களின் உண்மைத்தன்மையை செபி, ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

பாதாளத்தில் பங்குச்சந்தை!கடும் சரிவில் சென்செக்ஸ்,நிப்டி:அதானி பங்குகள் 17% வீழ்ச்சி

இதையடுத்து, அதானி குழுமத்தின் பங்கு விற்பனையை ஆய்வு செய்ய இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செபி வட்டாரங்கள் கூறுகையில் “ அதானி குழுமத்தின் அனைத்து பரிவர்த்தனைகள், பங்கு விற்பனைகள், எப்பிஓ அனைத்தையும் செபி விசாரிக்க வாய்ப்புகள் அதிகரி்த்துள்ளது”எனத் தெரிவித்தன.

இது குறித்து செபியின் செய்தித்தொடர்பாளரும் எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டார். 

click me!