பிப்ரவரி 1ம் தேதி தாக்கலாகும் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
பிப்ரவரி 1ம் தேதி தாக்கலாகும் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
தற்போது வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.50 லட்சமாக இருக்கிறது. அதாவது ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுவோர் வருமானவரி ரிட்டன் தாக்கல், வரி செலுத்தத் தேவையில்லை. இந்த அளவு ரூ.5 லட்சமாக உயர்த்தலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அருண் ஜேட்லி நிதிஅமைச்சராக இருந்தபோது கடைசியாக ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக வருமானவரி விலக்கு உயர்த்தப்பட்டது அதன்பின் 4ஆண்டுகளாக ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வருமானவரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும்என மாதஊதியம் பெறுவோர் காத்திருக்கிறார்கள். ஆனால், ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது.
ஒருவேளை வரும்பட்ஜெட்டில் ரூ.5 லட்சமாக வருமானவரி உச்சவரம்பு விலக்கு உயர்த்தப்பட்டால் மக்கள் கைகளில் பணம் நன்கு புழங்கும், நுகர்வு அதிகரிக்கும், பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும்.
ஆனால், தற்போது, முதியோருக்கு அதாவது ரூ.60 முதல் ரூ.80 வயதுள்ளபிரிவினருக்கு ஆண்டு வருமானவரி உச்ச வரம்பு விலக்கு ரூ.3 லட்சமாக இருக்கிறது.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கூறுகையில் “ மத்திய பட்ஜெட் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதாகவும், மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிகமாகச் செலவிடக்கூடியதாகவும் இருக்கும். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த அதிகமான அளவு பொதுச்செலவுத் திட்டம் கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்திருந்தார்
5 லட்சம் கோடி டாலர் குறுகிய ஆசை!இந்தியா வளர்ந்த நாடாக மாற 20 ஆண்டுகள் தேவை:RBIமுன்னாள் கவர்னர்
உலகளவில் பொருளாதார மந்தநிலை வரும் என அச்சம், மத்திய வங்கிகள் வட்டிவீதத்தை உயர்த்துவது, பணவீக்க உயர்வு, இவற்றுக்கு மத்தியில் இந்த பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யஉள்ளார்.
இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என நிதிஅமைச்சர் தெரிவித்திருப்பதால், மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்தால்தான் நுகர்வு அதிகரிக்கும் அதன் மூலம் பொருளாதார சுழற்சி வேகமெடுக்கும். மக்களின் நுகர்வு அதிகரிக்க, அவர்களின் கைகளில் அதிகமான பணப்புழக்கம் தேவை, அதை வருமானவரி உச்ச வரவும் விலக்கை அதிகப்படுத்தும் போது அதிகமான பணம் மக்கள் கைகளில் புழங்கும்.
வரும் பட்ஜெட் நிர்மலா சீதாராமன் தாக்கல்ச செய்யும் கடைசி முழுபட்ஜெட்டாகும். அடுத்த 2024-25ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது மக்களவைத் தேர்தல் வரும் என்பதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும், மக்களுக்கான சலுகைகள் எதையும் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது