ரூ. 2,153 கோடி நன்கொடை! இந்தியாவின் மிகவும் தாராள மனம் கொண்ட கோடீஸ்வரர் இவர் தான்!

By Ramya s  |  First Published Nov 7, 2024, 2:51 PM IST

இந்தியாவின் அதிக நன்கொடையாளர் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார். அவர் எத்தனை கோடி நன்கொடை வழங்கி உள்ளார் தெரியுமா?


HCL நிறுவனர் ஷிவ் நாடார் இந்தியாவின் பெரும்பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த சூழலில் நாட்டிலேயே அதிக நன்கொடை வழங்குவோர் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார். Hurun India மற்றும் EdelGive ஆகியவை 2024-ம் ஆண்டுக்கானEdelGive-Hurun இந்தியா பரோபகாரப் பட்டியலை வெளியிட்டுள்ளன.. இது இந்தியாவின் தாராள மனப்பான்மை கொண்ட நபர்களின் 11வது வருடாந்திர தரவரிசையாகும். இந்த பட்டியலில் தான் ஷிவ் நாடார் முதலிடம் பிடித்துள்ளார். அவர் ஆண்டுக்கு 2,153 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே மிகவும் தாராள மனப்பான்மை கொண்ட நபராக ஷிவ் நாடார் உள்ளார்.

79 வயதான ஷிவ் நாடார், ஒரு நாளைக்கு 5.9 கோடி ரூபாய் நன்கொடையுடன் 'இந்தியாவின் மிகவும் தாராளமான' பட்டத்தை 3-வது முறையாக பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

நாட்டின் பெரும்பணக்காரராக கருதப்படும் முகேஷ் அம்பானி ஆண்டுக்கு 407 கோடி ரூபாய் நன்கொடையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார், அதே சமயம் Zerodha நிறுவனத்தின் நிகில் காமத், இளைய பரோபகாரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் ரூ. 154 கோடி நன்கொடையுடன், ரோகினி நிலேகனி பட்டியலில் அதிக நன்கொடை வழங்கிய பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். 

தங்கக் கடன் வாங்கப் போறீங்களா? இதை எல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

இதுகுறித்து EdelGive-Hurun வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியாவில் அதிக நன்கொடை வழங்குபவர்களை முன்னிலைப்படுத்தவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக இந்தியாவின் பரோபகார நிலப்பரப்பில் தனிப்பட்ட வழங்குபவர்களின் முக்கியத்துவத்தைப் படம்பிடிக்கவும் இது எங்களின் முயற்சியாகும். நன்கொடைகள் 1 ஏப்ரல் 2023 முதல் மார்ச் 31, 2024 வரை அவர்களின் ரொக்கம் அல்லது ரொக்கத்திற்கு சமமான மதிப்பின் மூலம் அளவிடப்பட்டது.

EdelGive பட்டியலில் உள்ள முதல் 10 நபர்கள் ரூ 4,625 கோடி நன்கொடையாக அளித்துள்ளனர், இது பட்டியலில் உள்ள மொத்த நன்கொடைகளில் கிட்டத்தட்ட 53% ஆகும். கிருஷ்ணா சிவுகுலா மற்றும் சுஸ்மிதா & சுப்ரோடோ பாக்சி ஆகியோர் முறையே 7வது மற்றும் 9வது இடங்களைப் பெற்று முதல் 10 இடங்களுக்குள் நுழைந்தனர்.

உலகின் இந்த ஆடம்பர இடம் தான் நீதா அம்பானியின் ஃபேவரைட்! ஒரு நாள் தங்குவதற்கு ரூ.62 லட்சமாம்!

இந்த உயர்மட்ட நன்கொடையாளர்களில் 6 பேர் தங்கள் நன்கொடை முயற்சிகளில் முதன்மையாக கல்வியில் கவனம் செலுத்தியுள்ளனர், தரமான கற்றலுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கும், இந்தியா முழுவதும் கல்வி முயற்சிகளை ஆதரிப்பதற்கும் வலுவான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!