பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு மூன்று தவணைகளாக நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு தொடங்கிய திட்டம் தான் பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம். பெண்களின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட மிஷன் சக்தியின் துணை திட்டம் தான் இந்த மாத்ரு வந்தனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு 3 தவணையாக நிதியுதவி வழங்கப்படுகிறது.
பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நோக்கம்
undefined
முதல் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு முன்னும் பின்னும் பெண் போதுமான ஓய்வு எடுக்கக்கூடிய வகையில், ஊதிய இழப்பிற்கான பகுதி இழப்பீட்டிற்கு பண ஊக்கத்தொகை வழங்குதல்;
பெண் குழந்தையாக இருந்தால், இரண்டாவது குழந்தைக்கு கூடுதல் ரொக்க ஊக்கத்தொகையை வழங்குவதன் மூலம் பெண் குழந்தைக்கான நேர்மறையான நடத்தை மாற்றத்தை மேம்படுத்துதல்.
இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள்;
பகுதியளவு (40%) அல்லது முழுமையாக மாற்றுத்திறனாளி பெண்கள்
வறுமை கோட்டிற்கு கீழ் என்ற ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்கள்
இ-ஷ்ரம் அட்டை வைத்திருக்கும் பெண்கள்
கிஷன் சம்மன் நிதியின் கீழ் பயனடையும் பெண் விவசாயிகள்
100 நாள் வேலை அட்டை வைத்திருக்கும் பெண்கள்
நிகர குடும்ப வருமானம் ரூ.1000க்கும் குறைவாக உள்ள பெண்கள்.
எனினும் மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்களில் வேலையில் இருப்பவர்கள் அல்லது தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் இதே போன்ற பலன்களைப் பெறுபவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் முதல் இரண்டு குழந்தைகளுக்குப் பலன் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும். முதல் குழந்தைக்கு இரண்டு தவணையாக ரூ.5000 மற்றும் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஒரே தவணையாக பெண் குழந்தையாக இருந்தால் ரூ.6000 பலன் வழங்கப்படும். இருப்பினும், இரண்டாவது குழந்தைக்கு நன்மைகளைப் பெற, கர்ப்ப காலத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். இது பிறக்கும் போது பாலின விகிதத்தை மேம்படுத்தவும், பெண் சிசுக்கொலையைத் தடுக்கவும் உதவும். முறைகேடுகளைத் தவிர்க்க பயனாளியின் ஆதார் எண்ணின் அடிப்படையில் மட்டுமே பலன்களைப் பெற முடியும்.
மூத்த குடிமக்களுக்கு ரூ.5,00,000: அரசின் திட்டத்திற்கு வீட்டில் இருந்தே விண்ணப்பிப்பது எப்படி?
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
தகுதியுள்ள பெண்கள், அங்கன்வாடி மையத்தில் (AWC) திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்வதற்காக, பயனாளி பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் 1-Aஐ, அனைத்து வகையிலும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்கள், அங்கன்வாடி மையத்தில் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தம்/ஒப்புதல் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
படிவத்தை சமர்ப்பிக்கும் போது, பயனாளி தனது ஆதார் விவரங்கள், அவரது எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன், அவரது/கணவர்/குடும்ப உறுப்பினரின் மொபைல் எண் மற்றும் அவரது வங்கி/அஞ்சல் அலுவலக கணக்கு விவரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசின் இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் கிடைக்கும்? எப்படி தெரியுமா?
விண்ணப்ப படிவத்தை அங்கன்வாடி மையத்தில் இருந்து பெற்லாம். அல்லது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் (http://wcd. nic.in) படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அங்கன்வாடி மையத்தில் சமர்ப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் 7998799804 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்..