Trump Tariff on India: இந்தியாவின் ராஜதந்திரம் என்ன? டிரம்புக்கு அடிபணியுமா?

Published : Apr 07, 2025, 12:31 PM IST
Trump Tariff on India: இந்தியாவின் ராஜதந்திரம் என்ன? டிரம்புக்கு அடிபணியுமா?

சுருக்கம்

டிரம்ப் விதித்த பரஸ்பர வரியால் இந்திய பங்குச் சந்தை சரிந்துள்ளது. ஆசிய சந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதே தற்போதைய கேள்வி.

Indian share market today: இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ், நிப்டி சரிந்து கரடியின் கை ஓங்கி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்து இருக்கும் reciprocal tariffs-ன் (பரஸ்பர வரி) சூட்டை தற்போதுதான் இந்திய பங்குச் சந்தை உணர்ந்து இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி 60 நாடுகளும் உணர்ந்து வருகின்றன. குறிப்பாக ஆசிய பங்குச் சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கேள்வியே இந்த தாக்கம் நீண்ட நாட்களுக்கு நீடிக்குமா அல்லது குறைந்த நாட்களுக்கு மட்டுமே நீடிக்குமா என்பதுதான்.

பங்குச் சந்தை சரிவு கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
உலகளாவிய வரி பதற்றங்கள் Trump Vs World: உலகளாவிய வர்த்தக அமைப்பு Trump Tariffs-க்குப் பின்னர் பெரிய மாற்றத்திற்கும் சரிவுக்கும் இட்டுச் சென்றுள்ளது. டிரம்பின் பரஸ்பர வரிக்கொள்கைக்கு எந்த நாடும் தப்பவில்லை. இந்த புதிய வரி விதிப்பை டிரம்ப் அமெரிக்காவுக்கான விடுதலை நாள் என்று வர்ணிக்கவும் செய்தார். ஆனால், உலக நாடுகளுக்கு இது கருப்பு திங்களாக அமைந்துவிட்டது. இந்த வரி விதிப்பின் மூலம் உலக நாடுகளுடன் பேரம் பேசலாம் என்பது டிரம்பின் தந்திரமாக இருந்தாலும், சீனா போன்ற நாடுகள் 34% வரியை உடனே விதித்து டிரம்புக்கு சவால் விடுத்துள்ளது. இனி பங்குச் சந்தையில் என்ன நடக்கும்? என்பது இன்னும் தெளிவாக தெரியாத நிலையில், உலக அளவில் பங்குச் சந்தை சரிந்துள்ளது. டிரம்ப் இனி என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த பங்குச் சந்தை சரிவு அமெரிக்காவையும் பெரிய அளவில் பாதித்து இருப்பதால், டிரம்ப் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ், நிப்டி வரலாறு காணாத சரிவு; கரடியின் ஆட்டம் ஆரம்பமா?

ரத்தக்களரியில் வால் ஸ்ட்ரீட்: 
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பெரிய அளவில் பாதித்துள்ளது. S&P 500 கடந்த 11 மாதங்களில் மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தது. இரண்டு அமர்வுகளில் 5.4 டிரில்லியன் டாலர் அளவிற்கு சந்தை மதிப்பு சரிந்தது. இது 6% வீழ்ச்சியாகும்.  மார்ச் 2020 க்குப் பிறகு ஏற்பட்ட மோசமான சரிவாக கருதப்படுகிறது. டெஸ்லா 10% சரிந்தது. என்விடியா மற்றும் ஆப்பிள் 7% க்கும் மேல் சரிந்தன. மேலும் நாஸ்டாக் 100-ல் கரடி அதிரடியாக நுழைந்தது. வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட சரிவுதான் இன்று, திங்கட்கிழமை ஆசிய சந்தைகளை நொறுக்கி வருகிறது. முதலீட்டாளர்கள் என்ன செய்வது என்று விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இந்தியாவின் ராஜதந்திம் - பழிவாங்கலா அல்லது சமரசமா?: 
அமெரிக்காவுக்கு சீனா கடுமையான பதிலடி கொடுக்க தயாரானாலும், இந்தியா மென்மையான அணுகுமுறையை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ராய்ட்டர்ஸ் வெளியிட்டு இருக்கும் செய்தியின்படி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் அமெரிக்காவை பழிவாங்குவதற்கு பதிலாக அமெரிக்காவிடமிருந்து சலுகைகளை பெறுவதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. வியட்நாம் மற்றும் கம்போடியா போன்ற பிற நாடுகள் குறைந்த வரிகளை பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்துகின்றன என்பது தெரிய வந்துள்ளது. 

பெங்களூவில் தங்க முகமூடி அணிந்து பிறந்த நாள் கொண்டாடிய பிட்காயின் நிறுவனர் சடோஷி நகமோட்டோ!!

இந்திய பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் மீது வரி?:
இன்று காலை துவங்கிய இந்திய பங்குச் சந்தையில் நிஃப்டி பார்மா குறியீடு 7% வரை சரிந்தது. நடப்பாண்டு துவக்கம் முதல் இன்று வரை  பார்மா குறியீடு 14% ஆக சரிந்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி, டிரம்ப் 60 நாடுகளில் பரஸ்பர வரிகளை அதிகப்படுத்துவதாக அறிவித்தார். ஆனால் அன்று மருத்துவ துறை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், மறுநாள் திடீரென அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மீது வரிவிதிக்கப்படும் என்று அறிவித்தார்.  இது இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களை பெரியதாக பாதித்துள்ளது. 

தற்போது, ​​அமெரிக்காவிலிருந்து மருந்து இறக்குமதிகளுக்கு இந்தியா 10%  வரியை வசூலிக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்கா இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதிகளுக்கு எந்த வரியையும் வசூலிக்கவில்லை. 

பார்மாசூட்டிகல்ஸ் பங்குகள் வீழ்ச்சி:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்தத் துறையின் மீதான வரியை அடுத்து இன்று கிளாண்ட் பார்மா லிமிடெட், க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், லாரஸ் லேப்ஸ் லிமிடெட் மற்றும் பயோகான் லிமிடெட் உள்ளிட்ட இந்திய மருந்து நிறுவனங்களின் பங்குகள் 8% வரை சரிந்தன. மற்ற மருந்து உற்பத்தியாளர்களின் பங்குகளும் 2% முதல் 6% வரை சரிந்தன. இது இந்தியாவில் மருந்துகளின் விலையை அதிகரிக்குமா? என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தங்கத்தை விடுங்க.. 2026ல் உச்சத்தை தொடப்போகும் வெள்ளி விலை.. எவ்வளவு தெரியுமா?
ஜோடிகளுக்கு குட் நியூஸ்.. இனி ஆதார் கார்டு தேவையில்லை.. இனி நோ டென்ஷன்