பெங்களூவில் தங்க முகமூடி அணிந்து பிறந்த நாள் கொண்டாடிய பிட்காயின் நிறுவனர் சடோஷி நகமோட்டோ!!

Bitcoin Satoshi Nakamoto: பிட்காயின் நிறுவனர் சடோஷி நகமோட்டோவின் 50வது பிறந்தநாள் பெங்களூரில் கொண்டாடப்பட்டது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கருப்பு நிற ஹூடி மற்றும் தங்க மாஸ்க் அணிந்து அவர் கொண்டாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Bitcoin Satoshi Nakamoto: சடோஷி நகமோட்டோ என்ற புனைப்பெயரால் மட்டுமே அறியப்பட்ட  பிட்காயினின் நிறுவனர் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார்.  இவர்தான் பிட்காயினை கண்டுபிடித்தவர் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர் தனது 50வது பிறந்த நாளை, பெங்களூரில் கருப்பு நிற ஹூடி மற்றும் தங்க மாஸ்க் அணிந்து கொண்டாடி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பிட்காயின் உருவாக்கிய சடோஷி நகமோட்டோ:
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியை ஜனவரி 2009-ல் அறிமுகப்படுத்திய பின்னர் சடோஷி நகமோட்டோவை யாராலும் எங்கும் காண முடியவில்லை. மர்ம நபராகவே இருந்து வருகிறார். இருப்பினும், சடோஷி நகமோட்டோவின் பிறந்த நாள் வெளியுலகிற்கு தெரிந்த விஷயமாக இருக்கிறது. Bitocin பவுண்டேஷனான P2PFoundation துவங்கியபோது, சடோஷி நகமோட்டோ பதிவு செய்த வெள்ளை அறிக்கையில், தனது பிறந்த நாளை 1975, ஏப்ரல் 5 என்று குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் இவரது பிறந்த நாள் வெளியுலகிற்கு தெரிய வந்தது. அன்று முதல், கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயின் ஆர்வலர்களால் இந்த நாள் சடோஷி நகமோட்டோவின் அதிகாரப்பூர்வ பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

Latest Videos

அதிகரிக்கும் கிரிப்டோ திருட்டுகள்: தற்காத்துக் கொள்வது எப்படி?

பிட்காயின் மார்க்கெட் நிலவரம்:
சந்தை நிலவரத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 6 அன்று மதியம் 12.50 மணிக்கு பிட்காயின் ஒவ்வொன்றும் 83,068 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது, சந்தை மூலதனம் 1.64 டிரில்லியன் டாலர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13.57 டாலர் பில்லியன் அளவிற்கு வர்த்தக செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் Satoshi Nakamoto பிறந்த நாள் கொண்டாட்டம்?  
கிரிப்டோ நிறுவனர் சடோஷி நகமோட்டோவின் 50வது பிறந்தநாளைக் கொண்டாட, கிரிப்டோ முதலீட்டு தளமான முட்ரெக்ஸ் பெங்களூருவில் ஏற்பாடு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முட்ரெக்ஸ் நிறுவனத்தின் ஊழியர் ரிச்சா மிஸ்ரா LinkedIn குறிப்பில், ''சடோஷி நகமோட்டோ உயிர்பித்தது , விலைமதிப்பற்ற சந்தோசத்தை அளிக்கிறது. சடோஷி நகமோட்டோ பெங்களூருவின் வீதிகளில் நடந்து சென்றார். நகரமே அவரைப் பார்த்தது. கருப்பு நிற ஹூடி அணிந்து, தங்கத்தில் முகமூடி அணிந்து இருந்தார். அவர் அணிந்து இருந்த ஹூடியில் பிட்காயின் லோகோ இருந்தது. ஆனால், அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. அவருடன் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்'' என்று மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார். 

“தெருக்கள் உரையாடல்களாக மாறியது. புகைப்படங்கள் நினைவுகளாக மாறியது. 2008 ஆம் ஆண்டுக்கான வெள்ளை அறிக்கை மிகவும் உயிருடன் இருந்தது. பிறந்தநாள் வாழ்த்துக்கள், சடோஷி,” என்று மிஸ்ரா பதிவு செய்துள்ளார். 

Happy Birthday, Satoshi Nakamoto 💸💸 !

Mudrex brought ‘Satoshi’ to life in Bengaluru !

To celebrate the visionary behind Bitcoin, is offering a one-day exclusive deal for new users !

Deposit ₹5,000 today and receive ₹500 worth of FREE BTC in your wallet !… pic.twitter.com/6FyzNmzakK

— BITCOIN EXPERT INDIA (@Btcexpertindia)

Mudrex சலுகை அறிவிப்பு:
தளத்தில் பதிவுசெய்து, தங்கள் KYC ஐ முடித்து, தங்கள் BTC வாலட்டில் ரூ. 5,000 டெபாசிட் செய்த புதிய பயனர்களுக்கு Mudrex ஒரு நாள் சலுகையையும் வழங்கியது. 24 மணி நேரத்திற்குள் ரூ. 500 மதிப்புள்ள இலவச BTC-ஐ அவர்களது வாலட்டில் கிரடிட் செய்வதாக அறிவித்து இருந்தனர். 

கிரிப்டோகரன்சி மூலம் கோடீஸ்வரரான டாக்சி டிரைவர்! ரிஸ்க் எடுத்து சாதித்த நெப்போலியன்!!

சடோஷி நகமோட்டோ யார்?
பிட்காயின் தொடர்பாக 2008-ல் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு, ஜனவரி 2009 இல் பிட்காயின் தொடங்கப்பட்டது. அப்போதிருந்து, பலர் படைப்பாளரை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.

சடோஷி நகமோட்டோ முக்கிய ஊகங்கள் உள்ளன:

* 2014 இல், அமெரிக்க வெளியீடான நியூஸ்வீக், பிட்காயின் வெளியிட்டது இயற்பியலாளர் டோரியன் நகமோட்டோ என்று கூறியது, ஆனால் அந்த நபரே அதை மறுத்தார்.

* 2015 ஆம் ஆண்டில், நியூயார்க் டைம்ஸ் (NYT) கணினி விஞ்ஞானி நிக் சாபோவை மர்மமான படைப்பாளராக காட்டியது.

* 2016 முதல், ஆஸ்திரேலிய கணினி விஞ்ஞானி கிரெய்க் ரைட் தன்னை நகமோட்டோ என்று கூறி வந்தார். ஆனால் மார்ச் 2024 இல், ஒரு UK நீதிபதி அவர் சடோஷி நகமோட்டோ இல்லை என்று தீர்ப்பளித்து, அவரது கூற்றுக்களை UK வழக்கறிஞர்களிடம் பொய் சாட்சியமளித்ததாக கூறி பரிந்துரைத்தார்.

இப்படி மர்மங்கள் நிறைந்து சென்ற நிலையில் பெங்களூருவில் சடோஷி நகமோட்டோ தனது 50வது பிறந்த நாளை கொண்டாடி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!