ப்ரீ-பேமெண்ட், கூடுதல் மாதத் தவணை முறைகளில் குறைந்தபட்ச தொகையைவிட அதிகமான தொகையை செலுத்தினால், வட்டி குறைவதுடன் கடன் சுமையில் இருந்தும் விரைவாக விடுபடலாம்.
வங்கி கடனை விரைவாக கட்டி முடித்து வட்டி பணத்தை சேமிக்க நிதித்துறை ஆலோசகர்கள் பல்வேறு வழிகாட்டுதல்களைக் கூறுகின்றனர். அவறவறைப் பின்பற்றிப் பார்ப்பது கடன் சுமையில் இருந்து சீக்கிரம் விடுபட்டு சேமிப்பைத் தொடங்கலாம்.
ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் மாத சந்தாவை கூடுதலாக செலுத்தும் வாய்ப்பு எல்லா வங்கிகளிலும் இருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குறைந்தபட்ச தவணைத் தொகைக்குப் பதிலாக சற்று கூடுதலாக மாதத் தவணையைச் செலுத்தி வந்தால், முன்கூட்டியேவங்கிக் கடனை செலுத்தி முடிக்க முடியும்.
20 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும் வகையில் ரூ.50 லட்சம் பணத்தை 7.5 சதவீதம் வட்டியில் கடனாக பெற்றிருந்தால், மாதம்தோறும் ரூ.40,280 தவணைத் தொகை கட்டவேண்டும். 20 ஆண்டுகள் இவ்வாறு செலுத்தினால், ரூ.50 லட்சம் கடனுக்கு வட்டியே ரூ.46.7 லட்சம் கட்டியிருப்போம்.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் கிடைக்குமா? விற்பனை தொடங்குவது எப்போது?
இதற்குப் பதிலாக ஆண்டும்தோறும் ஒரு மாதத்தில் அதிகமான தொகையைக் கட்டினால், கடனை 16-17 ஆண்டுகளுக்குள் முடித்துவிடும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வரை அதிகமாக வட்டி கட்டுவதைத் தவிர்க்கலாம். இவ்வாறு ஆண்டுக்கு ஒருமுறை கூடுதலாக தவணையைச் செலுத்துவதால் வட்டி குறைவதோடு சீக்கிரம் கடனும் தீர்ந்துவிடும்.
பெரும்பாலும் கடன் வாங்கிய 12 மாதங்களுக்குப் பிறகு ப்ரீ-பேமண்ட் வசதி கிடைக்கும். இதை பயன்படுத்தியும் விரைவாக கடனைச் செலுத்தலாம். நிலுவையில் இருக்கும் அசல் தொகையில் 25 சதவீதம் வரை இந்த ப்ரீ-பேமண்ட் மூலம் திரும்பச் செலுத்தலாம். இதனால் வட்டி கணிசமாகக் குறையும்.
ப்ரீ - பேமண்ட் வசதியை பயன்படுத்தி கூடுதல் தொகையைச் செலுத்திய பின்பு, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் அல்லது மாதத் தவணையை மாற்றி அமைக்கலாம். அப்போது, மாதந்திர தவணைத் தொகையை முன்பு போலவே வைத்துக்கொண்டு, கால அவகாசத்தை குறைத்தால் கடன் விரைவாக தீரும்.
From The India Gate: காங்கிரஸின் தேர்தல் டார்கெட்டும் பாஜகவின் ராஜஸ்தான் ராணியும்