சட்டுன்னு இன்வெஸ்மெண்ட் பண்ண மியூசுவல் ஃபண்ட் இருக்கு

 
Published : May 03, 2018, 05:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
சட்டுன்னு இன்வெஸ்மெண்ட் பண்ண மியூசுவல் ஃபண்ட் இருக்கு

சுருக்கம்

how to invest in mutual fund

மக்கள் பெரும்பாலானவர்கள் சம்பாதித்த பணத்தை தங்கம், நிலம், அதைவிட்டால் வங்கியில் நீண்ட கால இருப்பாக மட்டுமே வைப்பார்கள்.  முதலீடு செய்வதில் கடிவாளம் கட்டி குதிரையாகவோ, அல்லது செண்டிமெண்டாகவோ இருக்கவேண்டியதில்லை.

மாத சம்பளக்கார்ர்களோ அல்லது பெரு முதலீட்டாளர்கள் என அனைவருக்கும் செட்டாவது மியூசுவல் ஃபண்ட்

மியூசுவல் ஃபண்ட் என்றால் என்ன?

இலாபம் கொடுக்கும் நல்ல பங்கை வாங்கி சரியான நேரம் பார்த்து விற்கும் அனுபவம் இல்லாதவர்கள் நாள்தோறும் இதை வேலையாகச்  செய்யும் நிர்வாகத் திறமையும் அனுபவமும் வாய்ந்த நபர்களிடம் தங்கள் பணத்தை கொடுத்து முதலீடு செய்யச் சொல்வதும், இது போல் சேரும் பல சிறு முதலீட்டாளர்களின் பணத்தை முதலீடு செய்வதுதான் மியூசுவல் ஃபண்ட். இதை நிர்வகிப்பவரே (fund manager) நிதி நிர்வாகியாவார்.

சீரான முதலீட்டு திட்டம்(Systametic Investment Plan)

மியூசுவல் பண்ட்டின் ஒருவகை திட்டமே சீரான முதலீட்டு திட்டம். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களினால் நேரடியாக பாதிப்பு என்பது இருக்கும். அனுபவமுள்ள நிர்வாகியால் செய்யப்படும் போது அதை சமாளிக்க முடியும். மொத்த முதலீடாக இல்லாமல் மாதந்திரம் 500, 1000 என சேமிக்கும் சிறு முதலீட்டாளர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளது.

ஒரு பங்கின் விலை பங்குச் சந்தையில் ஏற்ற இறங்களூக்கு ஏற்ப இருக்கும். சீரான முதலீடு செய்வதால் வெவ்வேறு காலங்களி வாங்கும் பங்கின் விலை நீண்டகால முதலீடாக செய்யும் போது அது பயனளிக்கிறது.

மியூசுவல் பண்டின் முக்கிய திட்டமே சந்தை காளை போல பாய்கிறது அல்லது கரடி போல பம்முகிறதா என்று நேரம் பார்த்துக்கிடக்க வேண்டியதில்லை. பின்ன என்னங்கா முதலீடு பண்ணுங்க நிம்மதியா இருங்க

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை
டிசம்பர் 31க்கு முன் இதை செய்யலனா பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்!