
கிசான் விகாஸ் பத்ரா ( kisan vikas patra -KVP )
அஞ்சலகங்களில் பல நல்ல திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் நாம் அனைவருமே வங்கியில் மட்டுமே இது போன்ற சேவைகளை பெற முடியும் என நினப்பதனால் பெரும்பாலான மக்களுக்கு அஞ்சலகத்தில் உள்ள திட்டங்களை பற்றி தெரிந்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது
கிசான் விகாஸ் பத்ரா( kisan vikas patra -KVP )
நீங்கள் வைத்திருக்கும் ரூ.10,000 ரூபாயை ரூ.20,000 ரூபாயா ஆக்க வேண்டுமா..? அதற்கு பயன்பட கூடிய திட்டம் தான் இது.
நீங்கள் என்ன தொகையை முதலீடு செய்கிறீர்களோ அது 118 மாதங்களில் (9 ஆண்டுகள் 10 மாதங்களில்) இரட்டிப்பாகும். இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் செலுத்துகிற தொகைக்கு அதைவிட இருமடங்கு மதிப்புள்ள பத்திரம் வழங்கப்படும்
118 மாதங்கள் கழித்து அந்த பத்திரத்தை தபால் அலுவலகத்தில் கொடுத்து முதிவு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு வழங்கப்படும் வட்டி 7.3 சதவீதம் ஆகும்
ரூ.1000, ரூ.5000, ரூ.10,000, ரூ.50,000 ஆகிய தொகைகளில் இப்பந்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒருவர் எவ்வளவு பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம்.
இதில் முதலீடு செய்யப் படும் தொகைக்கு வரி விலக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.