ஒரு லிட்டர் இவ்வளவா.? 4 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சத்தை தொட்ட "பெட்ரோல் விலை"..!

First Published Apr 23, 2018, 9:59 AM IST
Highlights
petrol and diesel cost is so high


பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்டு மக்கள் பெரும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

கடந்த நான்கு ஆங்குகளில் இல்லாத அளவிற்கு கடந்த  வெள்ளிகிழமையன்று பெட்ரோலின் விலை 77 ரூபாயை கடந்தது

இந்நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து உள்ளது

அதன்படி,

பெட்ரோலின் விலை லிட்டருக்குரூ.77.29 ஆகவும்,

டீசலின் விலை லிட்டருக்கு ரூ 69.37 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்துவந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது



தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் மாற்றி அமைக்கப்படுவது மட்டுமின்றி, தினமும் விலையிலும் உயர்ந்து  வருகிறது

மேலும் பெட்ரோல் மற்று டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது என்பதால் மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்

இல்லை என்றால் அத்தியாவசிய பொருளான எரிபொருள் விலை   தொடர் அதிகரிப்பால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக நேரிடுகிறது   

இன்றைய நிலவரப்படி, 10 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 77.29 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ. 69.37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

click me!