ரூ.151க்கு வோடபோன்... ரூ.109க்கு ஐடியா! ஏர்செல் போன குஷியில் வாரி வழங்கும் நிறுவனங்கள்...

 
Published : Feb 21, 2018, 06:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
ரூ.151க்கு வோடபோன்... ரூ.109க்கு ஐடியா! ஏர்செல் போன குஷியில் வாரி வழங்கும் நிறுவனங்கள்...

சுருக்கம்

Vodafone Rs.158 Recharge Pack Idea Rs.109 Recharge Offers

இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள டேட்டா போட்டி நடந்துகொண்டிருக்கிறது நாளுக்கு நாள் அதிரடியான ஆஃபருடன்  டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் புதிய சலுகைகள் மற்றும் கூடுதல் டேட்டா என வாடிக்கையாளர்களை கவரவும், தக்க வைத்து கொள்ளவும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. அதுவும் தப்போது கடந்த 1999 ஆம் ஆண்டு தமிழத்தில் தொடந்து நெட்வொர்க் சேவையில் இருந்த ஏர்செல் நிறுவனம் படிப்படியாக நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டது., சுமார் 8.5 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கியது தற்போது இழுத்து மூடப்பட்டுள்ளது.

சுமார் 9 கோடி வாடிக்கயாலர்களுடன் இருக்கும் இந்த ஏர்செல் வாடிக்கையாளர்களை வளைப்பதற்காக புதிய புதிய ஆஃபர்களுடன் இதில், வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை வழங்கும் இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வோடபோன் சூப்பர் பிளான் பெயரில் ரூ.158க்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ரூ.151க்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இரண்டு சலுகைகளும் கேரளாவில் மட்டும் வழங்கப்படுகிறது. மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

புதிய ரூ.158 சலுகையானது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1.5 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஏர்டெல் வழங்கும் ரூ.169 சலுகைக்கும் போட்டியாக அமைந்துள்ளது. 

ஏர்டெல் ரூ.169 சலுகையில் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை ஏர்டெல் இணைந்திருக்கும் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சலுகை 14 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

வோடபோன் அறிவித்திருக்கும் ரூ.151 சலுகை ஏர்டெல் வழங்கி வரும் ரூ.93 சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். 1 ஜிபி டேட்டா வழங்குகிறது. ஐடியா செல்லுலார் ரூ.109 சலுகையில் இதேபோன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

அதே போல, ஐடியா செல்லுலார் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.109 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 14 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்லிமிட்டெட் அழைப்புகளின் கால அளவு நிறைவுற்றதும், ஒவ்வொரு அழைப்பிற்கு நொடிக்கு 1 பைசா விதிகம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவின் சில வட்டாரங்களில் மட்டும் கிடைக்கும் புதிய சலுகையை வாடிக்கையாளர்கள் ஐடியா அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது மை ஐடியா செயலி மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும்.

ஐடியாவின் புதிய சலுகை ஏர்டெல் ரூ.93 மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ரூ.98 சலுகைகளுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் ரூ.93 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

சமீபத்தில் ஐடியா தனது போஸ்ட்பெயிட் சலுகைகளில் மாற்றம் செய்திருந்தது. ஐடியாவின் ரூ.499, ரூ.649, ரூ.999, ரூ.389, ரூ.1299, ரூ.1699 மற்றும் ரூ.2999 சலுகைகளில் மாற்றம் செய்திருந்தது. மாற்றத்திற்கு பின் கூடுதல் டேட்டா மற்றும் ரோல்ஓவர் சலுகை வழங்கப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை
டிசம்பர் 31க்கு முன் இதை செய்யலனா பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்!