LIC Policy :எல்ஐசி தரும் அரிய வாய்ப்பு! பழைய பாலிசியை மீண்டும் தொடங்கலாம்! முழு விவரம்

By Pothy RajFirst Published Feb 7, 2023, 2:37 PM IST
Highlights

எல்ஐசி நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அரிய வாய்ப்பு வழங்கஉள்ளது, இதன்படி பழைய பாலிசிகள் அதாவது முதிர்வுக்கு முன்பே முடிக்கப்பட்ட பாலிசிகளை மீண்டும் தொடங்கலாம்.

எல்ஐசி நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அரிய வாய்ப்பு வழங்கஉள்ளது, இதன்படி பழைய பாலிசிகள் அதாவது முதிர்வுக்கு முன்பே முடிக்கப்பட்ட பாலிசிகளை மீண்டும் தொடங்கலாம். 

இந்த வாய்ப்பை எல்ஐசி கடந்த 1ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது, வரும் மார்ச் 24ம் தேதிவரை இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசியை புதுப்பிக்க முடியும். 

தவிர்க்கமுடியாத காரணங்களால் தங்கள் பாலிசியை முடித்த பாலிசிதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் பாலிசியைத் தொடரலாம்.

ஏற்றத்தில் தங்கம் விலை! மீண்டும் சவரன் ரூ.43ஆயிரத்தை நெருங்குகிறது

இந்தத் திட்டத்தில் சேருவோருக்கு ப்ரீமியம் கட்டணத்துக்கான காலதாமதக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும், காலதாமதக்கட்டணம் மற்றும் ப்ரீமியம் தொகை செலுத்துவதிலும் தள்ளுபடி தரப்படும்.

ஒரு லட்சம் வரை லேட் பீஸ் செலுத்தினால், அதில் 25 சதவீதம் திரும்பப் பெறலாம், பாலிசி தொகை  ரூ.3 லட்சம் வரை செலுத்தினாலும 25 சதவீதம் கழிவு பெறலாம். ரூ.3 லட்சத்துக்கு மேல் ப்ரீமியம் செலுத்தினால், 30 சதவீதம் தள்ளுபடிதரப்படும்.

ப்ரீமியம் செலுத்தாத காலத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரை இருக்கும் பாலிசிகள் மட்டுமே மீண்டும் புதுப்பிக்க அனுமதிக்கப்படும். ப்ரீமியம் தொகையை பாலிசிதாரர்கள் எல்ஐசி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ அல்லது ஏஜென்ட் மூலமோ செலுத்தலாம்.

டெர்ம் இன்சூரன்ஸ், மருத்துவக் காப்பீடு, பலவித இடர்கள் கொண்ட பாலிசிகள் முடிந்திருந்தாலும் அதை இந்தத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கலாம். ப்ரீமியம் செலுத்தாமல் பாலிசிகள் காலாவதியாகி இருந்தாலும், புதுப்பிக்கும் தேதிக்குள் இருந்தால் பணத்தைச் செலுத்தி பாலிசியை புதுப்பிக்கலாம்.

எல்ஐசி- நிறுவனத்துக்கு கடந்த 5 நாட்களில் ரூ.65,400 கோடி இழப்பு: பங்கு மதிப்பு மளமளவென சரிவு

இந்தத் திட்டத்தின் கீழ் எல்ஐசி-யில் பாலிசி எடுத்த குழந்தைகள் முதல் முதியோர்வரையிலான அனைத்து திட்டங்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.இது பாலிசியாக மட்டுமல்லாமல் எதிர்கால சேமிப்பாகவும் இருக்கும்.

ஆதலால், முதிர்வு காலத்துக்குள் எல்ஐசி பாலிசியை முடித்தவர்கள்,இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் பாலிசியை புதுப்பிக்க முடியும். கட்டணம் செலுத்துவதிலும், ப்ரீமியம் செலுத்துவதிலும் தள்ளுபடி தரப்படுகிறது. 

click me!