தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. சவரன் மீண்டும் ரூ.43 ஆயிரத்தை நெருங்குகிறது.
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. சவரன் மீண்டும் ரூ.43 ஆயிரத்தை நெருங்குகிறது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 8 ரூபாயும், சவரனுக்கு 64 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.38 உயர்ந்துள்ளது, சவரனுக்கு ரூ.304 அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,365ஆகவும், சவரன், ரூ.42,920ஆகவும் இருந்தது.
ஏற்றத்தில் தங்கம் விலை! மிடில் கிளாஸ் மக்களுக்கு மீண்டும் ஷாக்: நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ரூ.5,373ஆகவும், சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 984 ஆக ஏற்றம் கண்டுள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,373க்கு விற்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் மளமளவென தங்கம் விலை அதிகரித்த நிலைியல் அடுத்து குறைந்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக தங்கம் விலையில் கடும் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.
சவரன் ரூ.44 ஆயிரத்தில் இருந்து ரூ.42 ஆயிரத்துக்குள் சரிந்துவிட்டது, கடந்த இரு நாட்களாக விலை உயர்ந்தநிலையில் மீண்டும் ரூ.43 ஆயிரத்தை நோக்கி தங்கம் விலை பயணிக்கிறது.
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. சவரன் மீண்டும் ரூ.43 ஆயிரத்தை நெருங்குகிறது.
இதனால் தங்கம் விலையைக் கணிக்க முடியாமல் நடுத்தர மக்களும், நகைப்பிரியர்களும் குழப்பத்தில் உள்ளனர். வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி கிராம் ஒன்று நேற்று ரூ.74.00 ஆக இருந்தநிலையில் அதே நிலை தொடர்கிறது. கிலோ ரூ.74,000 ஆக நீடிக்கிறது