
இன்றைய சூழலில் எல்லோரிடமும் பணமும் இருக்கிறது, தங்க நகைகளும் இருக்கிறது. ஆனால், எவ்வளவு இருக்க வேண்டும், வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த அதிகாரபூர்வ கணக்கீடு பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை.
வேலைக்கு செல்வோர், சொந்தமாகத் தொழில் செய்பவர்கள், வர்த்தகம் செய்பவர்கள், ஏற்றுமதி, இறக்குமதி செய்யபவர்கள் என அனைவரிடமும் சேமிப்புக் கணக்கில் பணம், கறுப்புப்பணம், நகைகள் இருக்கிறது.
ஆனால், எவ்வளவு நகைகள் அதிகபட்சமாக ஒருவர் வைத்திருக்கலாம், பணம் எவ்வளவு வைத்திருக்கலாம் என்பது தெரிவதில்லை. இதனால்தான் திடீரென அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை ரெய்டு வரும்போது சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல் வைப்பு: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
சமீபத்தில் மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பர்தா சாட்டர்ஜி, அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி இல்லங்களில் ரூ50 கோடி ரொக்கம், கிலோகணக்கில் தங்க நகைகளை அமலாக்கப்பிரிவு பறிமுதல்செய்தது நினைவிருக்கலாம்.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் இல்லத்தில்நடந்த சோதனையிலும் ரூ.11 லட்சத்துக்கும் அதிகமான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையெல்லாம் பார்க்கும்போது, பணக்காரர்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கும் மட்டுமின்றி, கடினமான உழைத்து சேமித்து வீட்டில் பணம் வைத்திருப்பவர்களுக்கு கூட எவ்வளவு பணம், நகைகளை வீட்டில் அதிகாரபூர்வமாக வைத்திருக்கலாம் என்ற கேள்வியை எழுப்புகிறது.
5ஜி அலைக்கற்றை ஏலம் முடிந்தது: எதிர்பார்த்தது 4.3 லட்சம் கோடி... கிடைத்தது 1.5 லட்சம் கோடிதான்!!
எவ்வளவு நகை வைத்திருக்கலாம்
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. வருமானவரித்துறைச் சட்டம் 1961ன் கீழ் இதை தெளிவு படுத்தியுள்ளது. இதன்படி திருமணமான பெண் ஒருவர் அதிபட்சமாக 500 கிராம் நகைகள் அதாவது 62.5 சவரன் நகைகளை வீட்டில் வைத்திருக்கலாம். திருமணம் ஆகாத பெண்கள் அதிகபட்சமாக 250 கிராம் தங்க நகைகள் அதாவது 31.25 சவரன் வைத்திருக்கலாம்.
ஆண் ஒருவர் 100 கிராம் நகைகள், அதாவது 12.5 சவரன் நகைகளை வைத்திருக்க அனுமதி உண்டு. இதற்கு மேல் பாரம்பரிய நகைகள், குடும்ப சொத்துக்கள் என்று நகைகள்இருந்தால், வருமான வரித்துறை சோதனையின் போது தெளிவுபடுத்தலாம். ஆனால், அது அதிகாரியின் முடிவைப் பொறுத்ததாகும்.
ஜூலை ஜிஎஸ்டி வரி வசூல் 28% அதிகரிப்பு: தொடர்ந்து 5-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடி
பணம் எவ்வளவு வைத்திருக்கலாம்
தனிநபர் ஒருவர் அரசுக்கு முறையாகக் கணக்குகாட்டி, வருமானவரி செலுத்தி எவ்வளவு பணமும் வைத்திருக்கலாம். அவ்வாறு வைத்திருக்க தடைஏதும் இல்லை. ஆனால், கணக்கில் வராததொகை வைத்திருக்கும்போதுதான் கேள்வி எழுகிறது.
உதாரணமாக ஒருவர் தனது வீட்டில் ரூ.50 லட்சம் பணம் வைத்திருக்கிறார் என்றால், அதற்குரிய வருமான ஆதாரங்கள், கணக்கை வருமானவரித்துறை ரெய்டின்போது காட்ட வேண்டும். அவ்வாறு வருமான ஆதாரத்துக்கான கணக்கு காட்டவில்லை என்றால், கைப்பற்றப்பட்ட தொகையைவிட 137சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.