
ஏறத்தாழ 60 சதவீத நடுத்தர குடும்பத்தினர் நிச்சயம் சொந்த வீடு கட்டுவதற்காக தனியாரிடமோ, அல்லது அரசு வங்கிகளிலோ நிச்சயமாக ஒரு வீட்டுக் கடனை பெற்று இருப்பார்கள், அதிக அளவில் தற்பொழுது மக்கள் வீடுகளை கட்டி வருகின்ற நிலையில், தனியார் நிறுவனங்களும், வங்கிகளும் வீட்டுக் கடன் குறித்த கவர்ச்சியான பல சலுகைகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி நான்கு முறைக்கும் மேல் அதிகரித்துள்ளது என்பதை நாம் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த தொடர் வட்டி அதிகரிப்பால் சுமார் 25 சதவீதத்திற்கும் மேலாக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது, இது புது வீடு கட்டுபவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளது என்றே கூறலாம்.
வீட்டுக் கடனை பொருத்தவரை ஒவ்வொரு முறையும் அந்த வட்டியானது உயர்த்தப்படும் பொழுது எல்லாம், அதற்காக பயனர்கள் கட்டும் மாதத் தவணையும் அதிகரிப்பது வழக்கம் தான். ஆனால் இதற்கான நிலையான வட்டி விகிதம் என்பது எப்பொழுதும் மாறாமலேயே இருக்கும். சில நேரங்களில் இந்த வட்டி விகிதம் உயர்த்தப்படும் பொழுது வெகு ஜனங்களுக்கு இது குறித்து தெரிவதில்லை.
கடனை கொடுத்த வங்கிகளும் இது குறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு தெளிவான விளக்கங்களையோ அல்லது தகவல்களையோ அனுப்புவதில்லை. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ள புதிய விதிமுறைகளின் அடிப்படையில் கடன்களுக்கான விதிமுறைகளை வாடிக்கையாளர்கள் சரியாக பின்பற்றாவிட்டால் அந்த கடன் தொகை மீது அபராத வட்டி விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
அதேபோல வட்டி விகிதம் அதிகரித்து வரும் காரணத்தால் EMI உயர்த்தும்போது அது குறித்த உரிய தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நிச்சயம் வங்கிகள் அறிவிக்க வேண்டும் என்று RBIயை தற்பொழுது உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்பொழுது வெளியாகி இருக்கும் புதிய விதிமுறைகள் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் மாறுபட்ட வட்டியில் இருந்து நிலையான வட்டி விகிதத்திற்கு மாறும்பொழுது வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனவு வீட்டை கட்டும் மக்கள், வங்கிகளின் சேவைமையத்தை அவ்வப்போது தொடர்புகொண்ட, தங்கள் வட்டி விகிதத்தை குறைக்க என்னென்ன செய்யலாம் என்பதை கேட்டு தெரிந்துகொண்டு செயல்பட்டால் நிச்சயம் எந்தவிதத்திலும் அவர்களுக்கு பண இழப்பு ஏற்படாது.
வங்கிக்கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.