வரலாற்று சிறப்புமிக்க மஹசூஸ் வெற்றி: AED 50,000,000 என்ற மாபெரும் பரிசுத்தொகையை வென்ற பாகிஸ்தானியர்

By karthikeyan VFirst Published Oct 26, 2021, 10:24 PM IST
Highlights

மஹசூஸ் லைவ் டிரா முடிவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் கலந்துகொண்ட பாகிஸ்தானை சேர்ந்த ஜுனைத் என்பவர் AED 50,000,000 என்ற மாபெரும் பரிசுத்தொகையை வென்றார்.
 

பாகிஸ்தானை சேர்ந்த ஜுனைத் என்பவர் அவரது தாயாரிடம், தான் என்றாவது ஒருநாள் பெரிய தொகையை பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்து வந்திருக்கிறார். 36 வயதான ஜுனைத் அந்த நிலையை எட்டிவிட்டார். மஹசூஸ் லைவ் டிராவில் ஒருசில நொடிகளில் பெரும் கோடீஸ்வரராகிவிடலாம். அதைத்தான் ஜுனைத் செய்திருக்கிறார். மஹசூஸ் லைவ் டிராவின் 4வது வாரத்தில் AED 50,000,000 என்ற பெருந்தொகையை வென்றுள்ளார் ஜுனைத்.

ஜுனைத் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதுடன், மஹசூஸ் டிராவில் மிகப்பெரிய தொகையை வென்ற முதல் வெற்றியாளர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜிசிசி லைவ் டிராவில் வென்ற மிகப்பெரிய தொகை இதுதான்.

துபாயில் ஒரு நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரியும் ஜுனைத், தனது வாழ்க்கையையே மாற்றியமைத்த அதிர்ஷ்ட நிகழ்வு குறித்து விவரிக்கிறார்: எனக்கு சம்பளம் வந்ததும் நான் மஹசூஸ் போட்டியில் கலந்துகொள்வது வழக்கம். இந்த மாதம் சம்பளம் வரும் தேதியன்று விடுமுறை தினம் என்பதால் சம்பளம் தாமதமாகத்தன வந்தது. அதனால் மஹசூஸ் போட்டியில் கடைசி நேரத்தில் கலந்துகொண்டேன் என்றார்.

சம்பளம் வந்ததும் சனிக்கிழமை மாலை வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக ஏடிஎம் சென்ற ஜுனைத்,  காரை விட்டு இறங்காமல் மஹசூஸ் டிராவில் கலந்துகொள்வதே முக்கியம் என்று கருதி, காருக்குள் இருந்தபடியே மஹசூஸ் அப்ளிகேஷனை திறந்து விளையாடியிருக்கிறார். அதுகுறித்து பேசிய ஜுனைத், ஸ்நாக்ஸை விட மஹசூஸ் டிராவில் முதலீடு செய்து விளையாடுவதே சிறந்தது என்று என் உள்ளுணர்வு கூறியது. மஹசூஸ் டிரா முடிவதற்கு 2 மணி நேரத்திற்கு முன், ரேண்டமாக 6 எண்களை தேர்வு செய்தேன். 

மறுநாள் காலை ஜூனைத்-ஐ பணக்காரர் ஆக்கிய ரேண்டம் வெற்றி எண்கள் - 6, 11, 21, 32, 33, 46. “நான் வெற்றி பெற்றதை அறிந்தபோது, இந்த பூமியே  என் காலடியில் விழுந்ததாக உணர்ந்தேன்” என்றார் ஜுனைத்.

கடந்த 11 மாதங்களாக ஒவ்வொரு நாளும் மஹசூஸ் டிராவில் வெற்றி பெற்று, பணக்காரன் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டிருந்த ஜுனைத், ஒருநாள் அந்த கனவு நனவானால் அவரைவிட மகிழ்ச்சியான நபர் வேறு யாரும் இருக்கமுடியாது. ”நான் முடி வெட்ட சென்றபோது, அந்த முடிதிருத்துநரின் திருமணத்திற்கு நான் பணம் கொடுத்தேன். அதுதான் அசாதாரணமான விஷயம்” என்று ஜுனைத் கூறினார்.

ஜுனைதின் இந்த பெருந்தன்மை மற்றும் உதவும் குணம் இளம் வயதிலேயே அவருக்கு உருவானது. “எனது தந்தை சிறிய டெய்லர். அவரது வருமானத்தில் என்னையும் என் உடன்பிறந்தவர்களையும் படிக்கவைக்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால் நான் 9ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு என் தந்தையின் கஷ்டத்தை பகிர்ந்துகொள்ள வேலைக்கு சென்றேன். நாங்கள் பாகிஸ்தானுக்கு வந்தோம். எனக்கு 18 வயது இருக்கும்போது என் தந்தை சிறுநீரக பிரச்னையால் உயிரிழந்தார். யாராவது எங்களுக்கு உதவியிருந்தால், என் தந்தையை காப்பாற்றியிருக்கலாம்” என்றார் ஜுனைத்.

வெளிநபர்களுக்கு உதவி செய்வதுடன், ஜுனைத் வேறு சில திட்டங்களையும் வைத்திருக்கிறார். ஏற்கனவே வாங்கிய கடன்களை திருப்பி செலுத்திவிட்டு, பாகிஸ்தானில் தனக்கும் தனது 4 உடன்பிறந்தவர்களுக்கும் வீடு கட்ட திட்டமிட்டிருக்கிறார் ஜுனைத். “நான், எனது உடன்பிறந்தவர்களின் குடும்பம் என நாங்கள் அனைவரும் எங்கள் வீட்டில் எங்கள் தாயாருடன் இணைந்து இருக்க வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய கனவு. இப்போது அப்பேர்ப்பட்ட எனது கனவு வீட்டை கட்ட உதவிய மஹசூஸ்-க்கு நன்றி என்று கூறினார் 3வது குழந்தைக்கு தந்தையாகப்போகும் ஜுனைத்.

மில்லியன்-திர்ஹாம்-க்கு சொந்தக்காரர் ஆகும் முன்பே, ஜுனைத் தன்னுடன் வரும் ஊழியர்களின் உணவிற்கான காசை அவரே கொடுப்பார்.

ஜுனைத் வெற்றி எண்களை தேர்வு செய்ததில் எந்த மேஜிக் ஃபார்முலாவையும் பின்பற்றவில்லை. இந்த அபாரமான வெற்றிக்கு தனது பெற்றோரின் ஆசீர்வாதமே காரணம் என்றார். “கடைசி 2 மணி நேரத்தில் நான் ஏன் விளையாடினேன் என்பதற்கு என்னிடம் விளக்கம் எல்லாமில்லை. AED 50,000,000 என்ற பெருந்தொகையை வைத்து, இறந்துபோன என் தந்தையை திருப்பி கொண்டுவர முடியாது; அதைத்தவிர இந்த பூமியில் எனது மற்ற அனைத்து கனவுகளையும் என்னால் நிறைவேற்றிக்கொள்ள முடியும். இந்த பணத்தின் மூலம் என் தாயார், என் குடும்பம், என் அன்பிற்குரியவர்கள் என அனைவருக்கும் என்னால் முடிந்ததை செய்ய முடியும்” என்று கூறி நெகிழ்ந்தார் ஜுனைத்.

”அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். எந்த சூழலிலும் உங்கள் கனவை மட்டும் தொலைத்துவிடாதீர்கள். நீங்கள் நம்பிக்கை வைத்தால், நீங்கள் காணும் கனவு கண்டிப்பாக ஒருநாள் நனவாகும். நான் கண்ட கனவு நனவாகும் என நம்பினேன். இப்போது AED 50,000,000 என்ற பெருந்தொகையை ஜெயித்திருக்கிறேன்” என்று ஜுனைத் கூறினார்.

www.Mahzooz.ae  என்ற இணையதளத்தில் பதிவு செய்து மஹசூஸ் டிராவில் கலந்துகொள்ளலாம். அடுத்த வார லைவ் டிரா வரும் சனிக்கிழமை(அக்டோபர் 30ம் தேதி) ஐக்கிய அரபு அமீரக நேரப்படி இரவு 9.00 மணிக்கு  தொடங்குகிறது. தகுதியான அனைவரும் மஹசூஸ் டிராவில் கலந்துகொள்ளலாம்.
 

click me!