ஏர் இந்தியாவை வாங்கியது டாடா நிறுவனம்... இத்தனை கோடிக்கு விற்கப்பட்டதா..? மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

By Thiraviaraj RMFirst Published Oct 8, 2021, 4:38 PM IST
Highlights

ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு டாடா நிறுவனத்துக்கு விற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரூ.70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு டாடா நிறுவனத்துக்கு விற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரூ.70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு. 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாடா நிறுவனத்திடம் செல்கிறது ஏர் இந்தியா!

டாடா குழுமத்தைப் பொறுத்தவரை, ஏர் இந்தியா நிறுவனம், ஏர் ஏசியா இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்களில் ஏற்கெனவே பெரும்பான்மை பங்குகளை கொண்டிருந்தது. ஏர் இந்தியா நிறுவனம் மூன்றாவது மிகப்பெரிய விமான நிறுவனம் ஆகும். சால்ட்-டு-சாப்ட்வேர் நிறுவனம் மற்றும் ஸ்பைஸ்ஜெட்டை சேர்ந்த் அஜய் சிங் ஆகியோரால் நிதி ஏலம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.இந்த மாத தொடக்கத்தில் கேபினட் செயலர் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழுவால் சரிபார்க்கப்பட்டது.

கையிருப்பு விலை நிர்ணயத்திற்கு எதிராக ஏலங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. டாடா நிறுவனம் அதிக பட்ச தொகையை கோடிட்டு இருந்தது.

click me!