போன்பே பயன்படுத்துறீங்களா..? அப்போ உங்களுக்குத் தான் இந்த அதிர்ச்சி செய்தி..!

By Thiraviaraj RMFirst Published Oct 26, 2021, 11:07 AM IST
Highlights

ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் போதும், உடனடி பணப்பரிமாற்றம், மொபைல் ரீ-சார்ஜ் என பலசவுகரியங்கள் வந்துவிட்டன. 

பெட்டிக்கடை, இளநீர் கடை என அடிமட்டத்தில் இருந்து பணப் பரிமாற்றத்திற்கு மொபைல் செயலிகளே பயன்படுத்தப்படுகின்றன. ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் போதும், உடனடி பணப்பரிமாற்றம், மொபைல் ரீ-சார்ஜ் என பலசவுகரியங்கள் வந்துவிட்டன.  பொதுவாக மொபைல் ஃபோன் ரீ-சார்ஜ்களுக்குப் பணப்பரிமாற்ற செயலிகள் கட்டணம் வசூலிப்பதில்லை. 

ஆனால் தற்போது, ஃபோன்பே செயலி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களிடமிருந்து, மொபைல் ரீ-சார்ஜ்களுக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான ரீ-சார்ஜ்களுக்கு 1 ரூபாயையும், 100 ரூபாய்க்கு மேற்பட்ட  ரீ-சார்ஜ்களுக்கு 2 ரூபாயையும் செயலாக்க கட்டணமாக (processing fee) ஃபோன்பே வசூலிக்க தொடங்கியுள்ளது. அதேநேரத்தில், 50 ரூபாய்க்கு குறைவான ரீ-சார்ஜ்களுக்கு ஃபோன்பே கட்டணம் எதையும் வசூலிக்கவில்லை.

இந்தச் செயலாக்க கட்டண வசூலிப்பு குறித்து ஃபோன்பே வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், இது ஒரு சிறிய அளவிலான சோதனை என்றும், இதில் சிறிய அளவிலான பயனர்கள், சிறிய அளவிலான செயலாக்க கட்டணத்தை செலுத்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சோதனையின் முடிவைப் பொருத்து, செயலாக்க கட்டணத்தை வசூலிக்கும் முடிவு திரும்பப் பெறப்படலாம் எனவும் ஃபோன்பே கூறியுள்ளது.

click me!