மத்திய பட்ஜெட் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன
நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி (இன்று) குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரானது பிப்ரவரி 9ஆம் தேதி நிறைவடையவுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளதால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. புதிய அரசாங்கம் அமைந்ததும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
அந்தவகையில், பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளதற்கிடையே, மத்திய பட்ஜெட் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
** பட்ஜெட் தாக்கல் என்பது நாட்டின் பொருளாதாரப் பாதையை வடிவமைக்கும், அரசின் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். அதற்கு ஏற்றவகையில், மத்திய பட்ஜெட்டை பல மாதங்கள் தயாரிப்பர்.
** இந்தியாவில் பட்ஜெட் செயல்முறையின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. கடந்த 1947ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அப்போதைய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி என்பவர் முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகளாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த இந்துக்களுக்கு அனுமதி!
** 1955ஆம் ஆண்டு வரை மத்திய பட்ஜெட்டானது ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டு வந்தது. 1955-56 பட்ஜெட்டின்போது, அப்போதைய நிதியமைச்சர் சி.டி தேஷ்முக் என்பவர் பட்ஜெட் ஆவணங்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சிடும் நடைமுறையை கொண்டு வந்தார்.
** சிறந்த பொருளாதார நிபுணரான சி.டி.தேஷ்முக் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்தார். இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்குவதில், தொழில்துறை வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கட்டமைப்பை வகுத்ததில் அவர் முக்கியப் பங்காற்றினார். இந்திய ரிசர்வ் வங்கியை சுதந்திரமான நிறுவனமாக மாற்ற இவர் உதவினார்.
** 2016ஆம் ஆண்டு வரை, மத்திய பட்ஜெட்டானது பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு, இவற்றை ஒன்றாக இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
** இந்தியாவில் எந்த நிதி அமைச்சரும் இதுவரை இல்லாத வகையில், மொரார்ஜி தேசாய் 10 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார்.
** பட்ஜெட் தாக்கலுக்கான நேரம் மாலை 5 மணியாக இருந்தது, இதனை கடந்த 2001ஆம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணியாக மாற்றினார்.
பாஜக கூட்டணியில் மீண்டும் நிதிஷ்குமார்: தேர்தலில் பலன் தருமா? பீகார் கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
** 1973-74ஆம் ஆண்டில், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, யஷ்வந்த்ராவ் பி.சவான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை ரூ.550 கோடியாக இருந்ததால் அது ‘கருப்பு பட்ஜெட்’ என்று அறியப்பட்டது.
** 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியன்று டிஜிட்டல் டேப்லெட்டைப் பயன்படுத்தி, முதல் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
** இந்திய வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரை 2020ஆம் ஆண்டு வாசிக்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அந்த பட்ஜெட் உரை, சுமார் 2 மணி 42 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.
** பெண்களின் தேவைகளில் கவனம் செலுத்துவதையும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு 2005ஆம் ஆண்டில் பாலின பட்ஜெட்டை இந்திய நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியது.