Harley Davidson new : இந்த ஆண்டில் மட்டும் எட்டு - ஹார்லி டேவிட்சன் அசத்தல் திட்டம்

By Kevin KaarkiFirst Published Jan 28, 2022, 11:30 AM IST
Highlights

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் மோட்டார்சைக்கிள் மாடல் விவரங்கள் வெளியாகி உள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 2022 ஆண்டில் மட்டும் எட்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை அனைத்திலும் மில்வாக்கி எய்ட் 117 என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இது 1920சிசி திறன் கொண்ட யூனிட் ஆகும். இந்த என்ஜின் அதிகபட்சம் 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. 

இந்த ஆண்டு அறிமுகமாகும் மோட்டார்சைக்கிள்களில் இரண்டு புதிய பேகர்கள், இரு லோ ரைடர்கள், நான்கு அப்டேட் செய்யப்பட்ட மாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன. இத்துடன் கஸ்டம் வெஹிகில் ஆப்பரேஷன்ஸ் (சி.வி.ஒ.) பரிவில் டிரைக் மாடலும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டிற்கான புது மாடல்கள் ஸ்டிரீட் கிளைடு எஸ்.டி., ரோடு கிளைடு எஸ்.டி. லோ ரைடர் எஸ், லோ ரைடர் எஸ்.டி., மூன்று சி.வி.ஒ. பைக்குகள் மற்றும் ஒரு சி.வி.ஒ. டிரைக் ஆகும். பெயருக்கு ஏற்றார் போல் அனைத்து மாடல்களும் தற்போது விற்பனை செய்யப்படும் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன்கள் ஆகும். 

"கிராண்ட் அமெரிக்கன் டூரிங் மற்று்ம குரூயிசர் மாடல்கள் உள்பட ஸ்டிராங்-ஹோல்டு பிரிவில் கவனம் செலுத்தும் நோக்கில், 2022 ஆண்டிற்கான மாடல்கள் அதிக சக்தி மற்றும் செயல்திறனை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவை ஒவ்வொன்றும் மில்வாக்கியின் அசாத்திய செயல்திறன் கொண்டிருக்கும். இவை உலகில் அனைவராலும் விரும்பப்படும் மோட்டார்சைக்கிள் பிராண்டாக எங்களை நிலைநிறுத்தும்." என ஹார்லி டேவிட்சன் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜேசென் செய்ட்ஸ் தெரிவித்தார்.

அம்சங்களை பொருத்தவரை ஸ்டிரீட் கிளைடு எஸ்.டி. மற்றும் ரோடு கிளைடு எஸ்.டி. மாடல்களில் ரிஃப்ளெக்ஸ் லின்க் செய்யப்பட்ட பிரெம்போ பிரேக், ஏ.பி.எஸ்., பூம் பாக்ஸ் ஜி.டி.எஸ். இன்ஃபோடெயிமென்மெண்ட் சிஸ்டம், கலர் டச் ஸ்கிரீன் மற்றும் நேவிகேஷன், குரூயிஸ் கண்ட்ரோல், டேமேக்கப் எல்.இ.டி. ஹெட்லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

பாதுகாப்பிற்கு ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் கார்னெரிங் ரைடர் சேஃப்டி என்ஹான்ஸ்மெண்ட்கள் ஆப்ஷனாகவும், கார்னெரிங் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ரைடு மோட்கள், கார்னெரிங் ஏ.பி.எஸ்., ஹில்-ஹோல்டு கண்ட்ரோல் மற்றும் டையர் பிரெஷர் மாணிட்டரிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

புதிய 2022 மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், லோ ரைடு, ஸ்டிரீட் கிளைடு எஸ்.டி. மற்றும் ரோடு கிளைடு எஸ்.டி. உள்ளிட்ட மாடல்கள் இந்திய சந்தையில் குறைந்த எண்ணிக்கையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!