
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பேன் அமெரிக்கா 1250 மற்றும் ஸ்போர்ட்ஸ்டர் S மாடல்களை திரும்ப பெறுகிறது. இரு மாடல்களின் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரில் கண்டறியப்பட்ட பிரச்சினையை சரி செய்ய ஹார்லி டேவிட்சன் தானாக முன் வந்து பாதுகாப்பு பேரில் ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது.
இரு மோட்டார்சைக்கிள்களை 0 டிகிரிக்களுக்கும் கீழ் ஓட்டும் போது TFT இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஸ்பீடோமீட்டர் மற்றும் நியூட்ரல் கியர் இண்டிகேட்டரை காண்பிக்க தவறுவதாக ரைடர்கள் கவனத்துள்ளனர். வாடிக்கையாளர்கள் மோட்டார்சைக்கிள் செல்லும் வேகத்தை கவனிக்காமல் தொடர்ச்சியாக ஓட்டுவது பாதுகாப்பு குறைபாடு என ஹார்லி டேவிட்சன் தெரிவித்து உள்ளது.
2021 மே 24 முதல் அக்டோபர் 19 வரையிலான தேதிகளில் விற்பனை செய்யப்பட்ட பேன் அமெரிக்கா 1250, கடந்த ஆண்டு மே 21 முதல் டிசம்பர் 13 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்போர்ட்ஸ்டர் S மாடல்களில் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஹார்லி டேவிட்சன் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினையை மென்பொருள் அப்டேட் மூலம் ஹார்லி டேவிட்சன் விற்பனையகங்களில் சரி செய்து தருவதாக தெரிவித்து இருக்கிறது.
பேன் அமெரிக்கா 1250 மாடல் அறிமுகமானது முதல் இரண்டாவது முறையாக ரீகால் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த மாடலின் சில யூனிட்கள் சீட் பேஸ்-இல் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய ரீகால் செய்யப்பட்டது. இந்த ரீகால் அறிவிப்பு இந்தியாவில் இதுவரை வெளியாகவில்லை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.