மிகப்பெரிய அடி..! அம்பானி, அதானிக்கும் கீழே சரிந்த ஜூகர்பெர்க்கிற்கு :ஒரேநாளில் ரூ.2.16 லட்சம் கோடி இழப்பு

Published : Feb 04, 2022, 10:13 AM ISTUpdated : Feb 04, 2022, 10:55 AM IST
மிகப்பெரிய அடி..!  அம்பானி, அதானிக்கும் கீழே சரிந்த ஜூகர்பெர்க்கிற்கு :ஒரேநாளில் ரூ.2.16 லட்சம் கோடி இழப்பு

சுருக்கம்

ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 26 சதவீதம் சர்வதேச சந்தையில் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து மார்க் ஜூகர்பெர்க்கிற்கு ஒரே நாளில் 2900 கோடி டாலர்(ரூ.2.16 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 26 சதவீதம் அமெரிக்க பங்குச் சந்தையில் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து மார்க் ஜூகர்பெர்க்கிற்கு ஒரே நாளில் 2900 கோடி டாலர்(ரூ.2.16 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஜோஸுக்கு யோகம் அடித்துள்ளது. சர்வதேச சந்தையில் அமேசான் பங்குகள் உயர்ந்ததைத் தொடர்ந்து 2000 கோடி டாலர்கள் லாபமீ்ட்டியது.

சர்வதேச அளவில் ஒரேநாளில் பங்குச்சந்தையில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 26 சதவீதம் குறைந்து 20,000 கோடி டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது இதுதான் முதல் முறையாகும். 

இந்த பெருத்த அடி காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு 8500 கோடி டாலராகச் சரிந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் அல்லது மெட்டாவில் ஜூகர்பெர்க்கிற்கு 12.8%பங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் நிறுவனத்தின் தலைவரும் நிறுவனரான ஜெஃப் பிஜோஸுக்கு நேற்று யோகமான நாளாகஅமைந்தது. அமேசான் நிறுவனத்தில் 9.9% பங்குகள் வைத்திருக்கும் பிஜோஸுக்கு அமேசான் பங்குகள் 15 சதவீதம் உயர்ந்து 2000 கோடி டாலர்கள் லாபத்தை வாரிக்கொட்டின. கடந்த 2009ம் ஆண்டுக்குப்பின் அமேசான் நிறுவனத்துக்கு கிடைத்த சதவீத அளவில் மிகப்பெரிய லாபமாகும்.

கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஜெஃப் பிஜோஸ் சொத்து மதிப்பு 57 % உயர்ந்து, 17700 கோடி டலாரக அதிகரித்தது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலாம் மஸ்கிற்கு அவர் நிறுவனத்தின் பங்குகள் சரிந்து ஒரே நாளில் 3500 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது. அதற்கு அடுத்தார்போல், இப்போது ஜூகர்பர்கிற்கு ஏற்பட்டுள்ளது. 

ஜூகர்பெர்கிற்கு நேற்று ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பால், அவரின் சொத்து மதிப்பு இந்தியாவின் முகேஷ் அம்பானி, கவுதம் அதானியின் சொத்து மதிப்புக்கும் கீழே சரிந்துவிட்டது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. 
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Business சீக்ரெட்: லட்சம் ரூபாய் சம்பாதிக்க சில ஆயிரங்கள் முதலீடு செய்தாலே போதும்.! எப்படி தெரியுமா?!
வீடு வாங்க போறீங்களா? குறைந்த வட்டியில் கடன் தரும் வங்கிகள் இதோ!