தீபாவளிக்கு ஊருக்கு போக “பஸ் புக்கிங் தொடங்கியாச்சி.....ஓடுங்க சீக்கிரம்”..”.ஹேப்பி ஜர்னி”.....!!!

Asianet News Tamil  
Published : Oct 25, 2016, 09:00 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
தீபாவளிக்கு ஊருக்கு போக “பஸ் புக்கிங் தொடங்கியாச்சி.....ஓடுங்க சீக்கிரம்”..”.ஹேப்பி ஜர்னி”.....!!!

சுருக்கம்

தீபாவளிக்கு ஊருக்கு போக “பஸ் புக்கிங் தொடங்கியாச்சி.....ஓடுங்க சீக்கிரம்”..”.ஹேப்பி ஜர்னி”.....!!!

தீபாவளியை முன்னிட்டு, கூட்ட நெரிசலை  தவிர்க்கும் பொருட்டு, மக்களுக்கு  ஏதுவாக பல  புதிய  பேருந்துகள்  இயக்கப்பட  உள்ளது.

இதனை தொடர்ந்த, வரும் 26, 27, 28ம் தேதிகளில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. 

கோயம்பேட்டில், முன்பதிவு செய்ய  கூடுதல்  மையங்கள்  திறக்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து மொத்தம் 21 ஆயிரத்து 289 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிகிறது.

வரும் 26, 27, 28 ஆம் தேதிகளில் வெளியூர் செல்வதற்காக கூடுதலாக டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டு, டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

இது தவிர,  கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் சானடோரியம் ஆகிய பேருந்து நிலையங்களில் மொத்தம் 30 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால்,  அனைவருக்கும்  டிக்கட்  கிடைக்கும்.

போக்குவரத்து மாற்றம்: 

வரும் 26, 27, 28 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து  செங்குன்றம் வழியாக ஆந்திராவுக்கு செல்லும் இரு மாநில அரசுப் பேருந்துகளும் அண்ணாநகரில் (மேற்கு) இருந்து இயக்கப்படுகிறது. 

தற்காலிக பேருந்து நிலையங்கள்:

 கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் வரை செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எதிரே மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும். 

திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்தும்,

பூந்தமல்லி வழியாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஒசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளன. 

எளிதான பயணத்திற்கு சிறப்பு ஏற்பாடு: 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வகையில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், முன்பதிவு செய்யாத பயணிகள் அனைவரும் 26 முதல் 28ம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு சென்று பயணம் மேற்கொள்ளலாம். 

தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று, அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்துக்குரிய பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 தீபாவளி  நெருங்குவதால்,  அனைவரும்  இந்த  சிறப்பு  பேருந்து  குறித்த  சரியான தகவலை  தெரிந்து கொண்டு,  கூட்ட   நெரிசலில் சிக்காமல், பாதுகாப்பான  பயணத்தை  மேற்கொள்ள  வேண்டும் என தெரிவித்து  கொள்கிறோம்.........!!!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்கம் ஏன் பிங்க் பேப்பரில் சுற்றிக் கொடுக்கப்படுகிறது தெரியுமா? அடேங்கப்பா.!!
கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியா? வட்டி விகிதத்தில் ஆர்பிஐ எடுத்த அதிரடி முடிவு.!!