GST Council Meeting: பருப்புகளின் தோல் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து: ஜிஎஸ்டி கவுன்டில் கூட்டம் குறித்த முழுவிவரம்

By Pothy RajFirst Published Dec 17, 2022, 3:54 PM IST
Highlights

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக நடந்த 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்தப் பொருட்களுக்கும் வரி உயர்த்தப்படவி்ல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக நடந்த 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்தப் பொருட்களுக்கும் வரி உயர்த்தப்படவி்ல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காணொலி வாயிலாக மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு வரியை உயர்த்துவது, சில உணவுப் பொருட்களுக்கு வரியைக் குறைப்பது போன்ற அம்சங்கள் பேடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தங்கப் பத்திரம் விலையை வெளியிட்டது ஆர்பிஐ! திங்கள்கிழமை விற்பனை தொடக்கம்

இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து வருவாய் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில் “ ஆன்லைன் கேமிங், கேசினோஸுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்த எந்த அம்சமும் இன்றையகூட்டத்தில் பேசப்படவில்லை. அமைச்சர்கள் குழு அளித்த அறிக்கையை ஜிஎஸ்டி உறுப்பினர்களுக்கு வழங்கவில்லை என்பதால் ஆலோசிக்கப்படவில்லை.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது: என்னென்ன முடிவுகள் எடுக்கப்படலாம்?

ஜிஎஸ்டி கவுன்சில் சில குற்றங்களை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. அதன்படி, “ எந்தவொரு அதிகாரியையும் அவரது கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுப்பது ஆதாரங்களை வேண்டுமென்றே அழித்தல், தகவல் வழங்காமல் இருத்தல் போன்றவை குற்றப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டியில் வரி ஏய்ப்பில் வழக்குத் தொடர்வதற்கான வரம்பு ஒரு கோடியில் ரூபாயில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் “ எந்தவிதமான பொருட்களுக்கான வரியும் உயர்த்தப்படவில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நேரமின்மை காரணமாக 15 பட்டியல்களில் 8 அம்சங்கள் மட்டுமே எடுக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டன.

ஜிஎஸ்டிக்கு மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை அமைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை. 

பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் வரி ஏய்ப்பு செய்வதைத் தடுப்பது குறித்தும் ஏதும் ஆலோசிக்கப்படவில்லை. 

எஸ்யுவி கார்கள் என்றால் என்ன என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட்டு, அத்தகைய வகை வாகனங்களுக்குப் பொருந்தும் வரியை வசூலிக்கப்படும்.

தலைசுத்த வைக்கும் தங்கம்! மீண்டும் இன்று விலை உயர்வு! நிலவரம் என்ன

பருப்பு தோல் (ஓடுகள்)வகைகள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனங்களின் நோ கிளைம் போனஸுக்கு வரி விதிக்கப்படாது எனத் தெளிவுபடுத்தப்பட்டது. 

எத்தனால் கலந்து பெட்ரோல் தயாரிக்கும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக்குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
 

click me!