
இந்தியாவில் கிரிப்டோகரன்ஸிக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. லாட்டரி, குதிரைப்பந்தயம், சூதாட்டம் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வரியைப்போல் கிரிப்டோகரன்ஸிக்கும் வரிவிதிக்க தயாராகிறது மத்திய அரசு
ஜிஎஸ்டி கவுன்சிலின் சட்டக்குழு இதுதொடர்பாக முழுமையாக ஆய்வு செய்து, கிரிப்டோகரன்சி தொடர்பான அனைத்து சேவைகள், செயல்பாடுகள் அனைத்துக்கும் 28சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்க பரிந்துரைக்க உள்ளது. இதற்கான அறிக்கையை வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வைத்து, அனுமதிபெறஇருக்கிறது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ அந்நிய செலவாணி மூலம் கிரிப்டோகரன்ஸியை விற்றால் தற்போது 18சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறதுஇதை தரகு வேலையாகக் கருத வேண்டும். இதை தனியாக ஒருபட்டியலின் கீழ் கொண்டுவரப்பட்டு வகைப்படுத்த வேண்டும். இதன்படி எங்கள் பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக்கொண்டால் கிரிப்டோகரன்ஸியின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்
ஆன்-லைன் விளையாட்டுகளில் பெட்டிங்(பணம் வைத்து ஆடுதல்) இல்லாமல் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படுகிறது. ஆனால், குதிரைப்பந்தயம், சூதாட்ட கிளப்புகளில் விளையாடுவோருக்கு 28சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது”எ னத் தெரிவித்தனர்.
சூதாட்ட கிளப், குதிரைப்பந்தயம், லாட்டரி ஆகியவற்றுக்கு விதிக்கப்படுவதுபோல் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்க மாநில நிதிஅமைச்சர்கள் கொண்ட குழு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி தவிர்த்து ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் சொத்து தொடர்பான பரிமாற்றத்துக்கு 30 சதவீதம் வருமானவரி செஸ் மற்றும் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுலம்லாமல் ஆண்டுக்கு ரூ.10ஆயிரத்துக்கு அதிகமாக விர்ச்சுவல் கரன்ஸிக்காக பணப்பரிமாற்றம் செய்தாலும் ஒரு சதவீதம் டிடிஎஸும் பிடிக்கப்படுகிறது இது ஜூலை 1ம் தேதி முதல் அமலாகிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.