ஆன்-லைன் கேம், குதிரைப் பந்தயம், கேசினோஸ் ஆகியவற்றுக்கு 28 சதவீதம் வரிவிதிப்பதை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆன்-லைன் கேம், குதிரைப் பந்தயம், கேசினோஸ் ஆகியவற்றுக்கு 28 சதவீதம் வரிவிதிப்பதை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகர் நகரில் நடந்து வருகிறது இருக்கிறது.
NSE-க்கு ரூ.7 கோடி அபராதம்: சித்ரா, சுப்ரமணியனுக்கு ரூ.5 கோடி: SEBI அதிரடி
சூதாட்ட கிளப்புகள்(கேசினோஸ்), குதிரைப் பந்தயம், ஆன்-லைன் கேம் ஆகியவற்றுக்கு தற்போது 18 சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது. இவற்றுக்கு வரியை அதிகப்படுத்த வேண்டும் என்று பலதரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மே மாதம் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் 8 மாநில நிதிஅமைச்சர்கள் குழுவை அமைத்தது.
இந்த அமைச்சர்கள் குழு தங்களின் அறிக்கையை ஜிஎஸ்டி கவுன்சிலிடம் தாக்கல் செய்துள்ளது. அமைச்சர்கள் குழு அளித்த பரிந்துரையில் “ குதிரைப்பந்தயம், கேசினோஸ், ஆன்-லைன் கேமிங் ஆகியவற்றுக்கு தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதை 28 சதவீதமாக உயர்த்தலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எந்தெந்தப் பொருட்களுக்கு வரி அதிகரிக்கும்; வரி குறைக்கப்படும்?
கேசினோஸைப் பொறுத்தவரை, ஒருவர் அங்கு சென்று, அங்கு வாங்கும் சிப்ஸ் அல்லது காயின்களுக்கு முழுமையாக 28சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும்.
அவர் வாங்கும் காயின்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிக்க வேண்டும். கேசினோவுக்குள் நுழைந்தாலும், அங்கு வாங்கும் உணவு, பானங்கள், மது ஆகியவற்றுக்கும் 28சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது
GST Council 47th meeting Today: கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு கிடுக்கிப்பிடி! 28 % வரியா?
இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் குழுவில் அமைச்சர்கள் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, குதிரைப்பந்தயம், ஆன்லைன் கேம், கேசினோஸ் ஆகியவற்றுக்கு 28 சதவீதம்ஜிஎஸ்டி வரிவிதிப்பதை ஒத்திவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த அறிக்கையை அமைச்சர்கள் குழுவுக்கு மீண்டும் அனுப்பி ஆய்வு செய்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளி்க்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன