nse co-location case: NSE-க்கு ரூ.7 கோடி அபராதம்: சித்ரா, சுப்ரமணியனுக்கு ரூ.5 கோடி: SEBI அதிரடி

By Pothy RajFirst Published Jun 29, 2022, 2:30 PM IST
Highlights

டார்க் ஃபைபர்(dark fibre case) வழக்கில் தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.7 கோடியும், முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணன், முன்னாள் தலைமை இயக்குநர் சுப்ரமணியன் ஆகியோருக்கு தலா ரூ.5 கோடி அபராதம் விதித்து பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி அதிரடி உத்தரவிட்டுள்ளது.

டார்க் ஃபைபர்(dark fibre case) வழக்கில் தேசியப் பங்குச்சந்தைக்கு(NSE) ரூ.7 கோடியும், முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணன், முன்னாள் தலைமை இயக்குநர் சுப்ரமணியன் ஆகியோருக்கு தலா ரூ.5 கோடி அபராதம் விதித்து பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி (SEBI)அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 18 நிறுவனங்களுக்கு ரூ.43.80 கோடி அபாரதம் விதித்துள்ளது செபி. இந்த அபராதத்தை அடுத்த 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

சில பங்குதரகர்கள் தேசியப் பங்குச்சந்தையிலிருந்து வர்த்தக விவரங்களை விரைவாகப் பெறுவதற்காக கோ-லொகேஷன் வசதிகளையும், விரைவான இன்டர்நெட் வசதிகளையும் பெற்றது தொடர்பான டார்க் ஃபைபர் வழக்கில் செபி உத்தரவிட்டுள்ளது.

தேசியப் பங்கு்சந்தை கவனக்குறைவாகச் செயல்பட்டதற்காக ரூ.7 கோடி அபராதமும், என்எஸ்இ முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணன், அவரின் உதவியாளர் சுப்ரமணியன் ஆகியோருக்கு தலா ரூ.5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. 
என்எஸ்சியின் தற்போதைய வர்த்தக மேம்பாட்டு அதிகாரி ரவி வாரணாசிக்கு ரூ.5கோடியும் அபராதமாக செபி விதித்துள்ளது.

இது தவிர, இன்டர்நெட் சேவை வழங்கிய சம்பார்க் இன்போடெயின்மென்ட் நிறுவனத்துக்கு ரூ.3 கோடி, பங்குதரகு நிறுவனங்களான வேடுவெல்த் புரோக்கர்ஸுக்கு ரூ.6 கோடி, ஜிகேஎன் செக்யூரிட்டீஸுக்கு ரூ.5 கோடியும் அபராதமாக விதி்க்கப்பட்டுள்ளது.

186 பக்கத்தில் இந்த உத்தரவுகளை செபி பிறப்பித்துள்ளது.அது மட்டுமல்லாமல் தேசியப் பங்குச்சந்தை ரூ62.60 கோடியை டெபாசிட்டாக செபியிடம் செலுத்த வேண்டும். வேடூவெல்த் ரூ.15.34 கோடி, ஜிகேஎன் செக்யூரிட்டீஸ் ரூ.4.90 கோடியை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தேசியப்பங்குச்சந்தைக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்கும் சம்பார்க் இன்போடெயின்மென்டிலிருந்து டார்க்ஃபைபர் மூலம் சில பங்குத் தரகர்கள் பங்கு தகவல்களை விரைவாகப் பெறுகிறார்கள் என்று செபிக்கு கடந்த 2015ம் ஆண்டு புகார் எழுந்தது. அந்தப் புகாரை விசாரித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

என்எஸ்இ மற்றும் ஊழியர்களின் உதவியால் பங்கு தரகு நிறுவனங்களான வேடூவெல்த், ஜிகேஎன் செக்யூரிட்டீஸ் நிறுவனங்கள் சிறப்பு இன்டர்நெட் இணைப்பு பெற்றுள்ளது தெரியவந்தது. 

click me!