
வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ், பதிவுச்சான்று ஆகியவற்றை எந்த முறையில் கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும் என்பது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட வரைவு விதியில் கூறப்பட்டிருப்பதாவது:
நான்கு சக்கர வாகனங்களான இலகு ரக வாகனங்கள், கனரக வாகனங்கள், பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தங்களிந் தகுதிச் சான்றிதழ், மற்றும் பதிவுச்சான்றை கண்டிப்பாக வெளிப்புறம் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.
இந்தத் தகவல்களை வாகனங்களில் தெரிவிக்கும் போது, நீலநிற பின்புறத்தில், மஞ்சள் நிற எழுத்துக்களில், ஏரியல்போல்ட் எழுத்தில் இருக்க வேண்டும்
இவ்வாறுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.