MG charge : 1000 நாட்களில் 1000 சார்ஜர்கள் - மாஸ் காட்டும் எம்.ஜி. மோட்டார்ஸ்

By Kevin KaarkiFirst Published Mar 4, 2022, 11:58 AM IST
Highlights

MG charge : எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் நாடு முழுக்க ஆயிரம் சார்ஜர்களை இன்ஸ்டால் செய்ய அதிரடியான திட்டம் தீட்டி இருக்கிறது. 

எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் எம்.ஜி. சார்ஜ் எனும் பெயரில் புதிய திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆயிரம் AC ஃபாஸ்ட் சார்ஜர்களை நாடு முழுக்க இன்ஸ்டால் செய்ய திட்டமிட்டுள்ளது. இவை டைப் 2 சார்ஜர்கள் ஆகும். இந்த ரக சார்ஜர்கள் பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்களை சப்போர்ட் செய்யும். இந்த சார்ஜர்களில் சிம் வசதி வழங்கப்படுகின்றன. 

"எம்.ஜி. தற்போது இந்திய எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. எம்.ஜி. சார்ஜ் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வது பற்றிய குழப்பத்தை தீர்க்கும். மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கவும் தூண்டும். இந்த திட்டத்தின் மூலம் 6 வழிகளில் சார்ஜிங் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறது," என எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ராஜீப் சப்பா தெரிவித்தார். 

கனெக்டெட் AC சார்ஜிங் மையங்கள் மூலம் பயனர்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் குறித்த கவலை இன்றி வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சார்ஜிங் மையங்கள் 24x7 முறையில் செயல்படும் என எம்.ஜி. மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் எப்போது நினைத்தாலும் ரைடு செய்ய முடியும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த திட்டத்தை எம்.ஜி. மோட்டார்ஸ் செயல்படுத்தி இருக்கிறது.

இதுதவிர எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த வாரம் அறிமுகமாகிறது. புதிய எம்.ஜி. ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஹலோல் உற்பத்தி ஆலையில் இருந்து விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. 

இந்த மாடல் இரண்டு  வேரியண்ட்களில் கிடைக்கும். அம்சங்களை போன்றே புதிய காரின் விலையிலும் மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. புதிய மாடலின் முன்புறம் எக்லோஸ் செய்யப்பட்ட கிரில், சார்ஜிங் சாக்கெட் எம்.ஜி. லோகோவின் அருகில் இடதுபுறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

முன்புற பம்ப்பர் ரி-டிசைன் செய்யப்பட்டு கூர்மையாக  காட்சியளிக்கிறது. இத்துடன் அகலமான ஏர் டேம், இருபுறங்களிலும் வெர்டிக்கல் இண்டேக்குகள் உள்ளன. புதிய எம்.ஜி. ZS EV மாடலில் ரி-டிசைன் செய்யப்பட்ட 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் புதிய டெயில் லேம்ப்  டிசைன், பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் லண்டன்-ஐ ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்..இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்..இ.டி. டெயில் லைட்கள், ரியர் ஸ்பாயிலர், ரூஃப் ரெயில்கள் உள்ளன. 

click me!