Russia-Ukraine War: உக்ரைன் ரஷ்ய போர்: சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் விலை அதிகரிக்க வாய்ப்பு

Published : Mar 04, 2022, 11:56 AM IST
Russia-Ukraine War: உக்ரைன் ரஷ்ய போர்: சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் விலை அதிகரிக்க வாய்ப்பு

சுருக்கம்

Russia-Ukraine War: உக்ரைன் மீது ரஷ்யா  தொடுத்துள்ள போரால், சமையலுக்குப்பயன்படும்  சூர்யகாந்தி எண்ணெய், பாமாயில் போன்றவற்றின் இறக்குமதி பாதி்க்கப்பட்டு அவற்றின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா  தொடுத்துள்ள போரால், சமையலுக்குப்பயன்படும்  சூர்யகாந்தி எண்ணெய், பாமாயில் போன்றவற்றின் இறக்குமதி பாதி்க்கப்பட்டு அவற்றின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரைக் கண்டித்து அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்யாவுக்கு பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. உக்ரைனில் நீடிக்கும் போர் பதற்றத்தால் அங்குள்ள துறைமுகங்கள் அனைத்தும்மூடப்பட்டுள்ளன.

ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையால் அங்கிருந்து எந்த பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை இருக்கிறது
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையால் அந்நாட்டிலிருந்து எந்த விதமான வர்த்தகமும் எந்த நாடும் செய்யத் தயாராக இல்லை.

ஆனால், உலகளவில் கோதுமை, மக்காச்சோளம், பார்லி, சோயாஆகியவற்றை உலகளவில் அதிகமாக ரஷ்யா, உக்ரைன் நாடுகள்தான் ஏற்றுமதி செய்கின்றன. அதுமட்டும்லலாமல் சூர்யகாந்தி எண்ணெயை உலகளவில் அதிகபட்சமாக இரு நாடுகளும்தான் ஏற்றுமதி செய்து வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை, உக்ரைனில் போர் காரணமாக ஏற்றுமதி பாதிப்பு ஆகியவற்றால் சூர்யகாந்தி எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கும் எனத் தெரிகிறது. 

அர்ஜென்டினா, பிரேசில் நாட்டில் சோயாபீன்ஸ் விளைச்சல் பாதிப்பு, மலேசியாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தோட்டப்பயிர்கள் விளைச்சல் பாதிப்பு, இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியது போன்றவற்றால் இந்தப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இருக்கிறது

வரும் நாட்களில் பாமாயில், சோயா, ரேப்சீட், சூர்யகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் விலை கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. உற்பத்தியாளர்கள் அதிக விலை கொடுக்கு வாங்கும்போது, அந்த விலை உயர்வு சில்லரை விற்பனையாளர்கள் தலையிலும், அதன்பின் நுகர்வோர்கள் தலையிலும் விழும்.

பாமாயில் எண்ணெய் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்தே இரு மடங்காகிவிட்டது, சோயாபீன் விலையும் 50 சதவீதம் உயர்ந்துவிட்டது. உக்ரைன் பிரச்சினையால் சூர்யகாந்தி எண்ணெய் விலையும் 50 சதவீதம் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. 

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்து புனித ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் முஸ்லிம்கள் நோன்பு வைக்கும்போது, பாமாயில், காய்கறிஎண்ணெய் போன்றவற்றின் தேவை அதிகரிக்கும். ஏற்கெனவே தட்டுப்பாடும், விலை உயர்வும் இருக்கும் நிலையில் அந்த நேரத்தில் மக்கள் அதிகமாக செலவிட வேண்டியதிருக்கும்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!