
உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 7வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.92 உயர்ந்து ரூ. 4,880-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.736 உயர்ந்து ரூ.39,040-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 72.10-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 72,100 விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.