
ரஷ்யா உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்த இரு நாடுகள் மட்டுமல்லாமல், பெலாரஸ் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏறக்குறைய 80ஆயிரம் முதல் ஒரு லட்சம் ஐ.டி.வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த வேலைவாய்பபுகளில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாக டலாஸ் நகரில் செயல்படும் ஐ.டி. ஆய்வு நிறுவனமான எவரெஸ்ட் குழுமம் தெரிவித்துள்ளது.
ஐ.டி. ஆய்வு நிறுவனமான எவரெஸ்ட் குழும நிர்வாக அதிகாரி பீட்டர் பென்டர் சாமுவேல் கூறியதாவது :
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ம் தேதி போர் தொடுத்தது. இந்தப் போரை ரஷ்யா நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் பதிலிடி கொடுத்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா சிதைத்திருப்பதால், அங்கு தொழில்கள், நிறுவனங்கள் புதிதாகஉருவாகி செயல்பட ஆண்டுகள்கூட ஆகலாம்.
அதிலும் உக்ரைன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பிரிவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சேவையில் சிறப்பாகச் செயல்படக்கூடிய நாடாகும். ஆனால், ரஷ்யா தொடர்ந்துள்ள இந்த போரால், இந்த துறைக்கு உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது, இங்கு வேலைபார்க்கும் ஊழியர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது
இந்நிலையில், தகவல்தொழில்நுட்ப ஆய்வுநிறுவனமான எவரெஸ்ட் குழுமம் நடத்திய ஆய்வில், “ உக்ரைனில் 30ஆயிரம் தொழில்நுட்ப பொறியாளர்கள், வங்கி, சில்லரை வர்த்தகம், ஆட்டோமொபைல், சுகாதாரப்பிரிவுஆகியவற்றில் தேர்டுபார்டி சேவைவழங்கும் பிரிவில் உள்ளனர். இந்தபோரால் இந்த சேவை அனைத்தும் பாதிக்கும். 20ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், உலகளாவிய வர்த்தக சேவைப் பிரிவில்ஈடுபட்டுள்ளனர். பெலாரஸ், ரஷ்யாவில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்டு பார்டி சேவை வழங்கும் பிரிவில் உள்ளனர், 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜிபிஎஸ் பிரிவில் உள்ளனர்.
இந்த போர், ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் போன்றவற்றால், வேலைவாய்ப்புகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கும். இந்த வேலைவாய்ப்புகளில் 70 சதவீதம் இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் பக்கம் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
பெலாரஸ், உக்ரைன், ரஷ்யாவில் ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள போர்பதற்றத்தால், உலகளவில் அறிவாரந்தவர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். இந்த பற்றாக்குறையைப் தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்தி, அறிவார்ந்தவர்களுக்காக விலை பேசுவார்கள். அப்போது மனிதஉழைப்பு எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு வேலைவாய்ப்புகள் திருப்பப்படும்”
இவ்வாறு சாமுவேல் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.