
உக்ரைன் ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விலை கடும் ஏற்றம், சர்வதேச காரணிகளால் மும்பை, தேசியப்பங்கு சந்தைகளில் இன்று காலையில் சரிவுடன் தொடங்கிய வர்த்தகம் மாலையிலும் வீழ்ச்சியில் முடிந்தது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் தீவிரமடைந்து வருகிறது. இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பெலாரஸில் நடத்திய முதல் சுற்றுப்பேச்சும் தோல்வி அடைந்தநிலையில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி நாடுகளும் தொடர்ந்து பொருளாதாரத் தடைகள் மட்டுமின்றி, பல்வே்று தடைகளையும் விதித்து வருகின்றனர்.அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க அதிபர் ஜோ பிடன் தடை விதித்தார்.
இரு நாடுகளின் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 110 டாலராக அதிகரித்துள்ளது. இதன் பாதிப்பு ரஷ்ய, உக்ரைன் நாடுகளின் கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்துள்ள நாடுகளை கடுமையாக பாதிக்கும், உலகளவில் ஒவ்வொரு நாட்டிலும் பணவீக்கத்தை அதிகப்படுத்தும்.
மும்பைப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் 650 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாததால் மேலும் சரிவை நோக்கி நகர்ந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 177 புள்ளிகள் சரிந்து 16,700 புள்ளிகளுக்கும் கீழ் வர்த்தகத்தை தொடங்கியது.
வர்த்தகத்தி இடையே மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 55,755 புள்ளிகள் வரை சென்றது. மாலை வர்த்தகம் முடிவில்,778 புள்ளிகள் சரிந்து, 55,468 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியில் 188 புள்ளிகள் குறைந்து, 16,606 புள்ளிகளில் வீழ்ச்சியுடன் வர்த்தகம் முடிந்தது.
இன்று ஒரேநாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.76ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. உலோகத்துறை பங்குகள், எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
தனியார்வங்கிகள் பங்குகள் பெருத்தஅடிவாங்கின. குறிப்பாக ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, மாருதி ஆகியவற்றின் பங்குகள் பெரும் இழப்பைச் சந்தித்தன.
மும்பைப் பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, பேங்க் ஆப் பரோடா, கோடக் மகிந்திரா, இன்டஸ்இன்ட் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஸ்டேட் வங்கி ஏசியன் பெயின்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன. டாடா ஸ்டீல், பவர்கிர்ட், என்டிபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹின்டால்கோ,
வங்கி, ஆட்டமொபைல், நிதித்துறை பங்குகள் சரிந்துள்ளன. உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு , தகவல்தொழில்நுட்பம் ஆகியவற்றின் பங்குகள் லாபமடைந்துள்ளன
மேலும், ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா பங்குச்சந்தைகளும் சரிவுடன் முடிந்து ஆசியப்பங்குச்சந்தையிலும் நம்பிக்கையற்ற சூழல் நிலவுகிறது. இந்த பாதிப்பு இந்தியப் பங்குச்சந்தையிலும் இன்று காலையிலிருந்தே எதிரொலித்தது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.