Petrol, diesel price: மக்களே அடுத்தவாரம் ஆரம்பம்: பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயர்கிறது தெரியுமா?

Published : Mar 02, 2022, 03:04 PM IST
Petrol, diesel price: மக்களே அடுத்தவாரம் ஆரம்பம்: பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயர்கிறது தெரியுமா?

சுருக்கம்

Petrol, diesel price: 5 மாநிலத் தேர்தல் முடிந்தபி்ன் அடுத்த வாரத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமல்படுத்தப்படும் எனத் தெரிகறது.  கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துவிட்டதால், இனிமேலும் எரிபொருள்விலையை உயர்த்தாமல் இருக்கமுடியாது என்பதால், தினசரி விலை ஏற்றம் அடுத்தவாரத்திலிருந்து தொடங்கும்.

5 மாநிலத் தேர்தல் முடிந்தபி்ன் அடுத்த வாரத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமல்படுத்தப்படும் எனத் தெரிகறது. 
கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துவிட்டதால், இனிமேலும் எரிபொருள்விலையை உயர்த்தாமல் இருக்கமுடியாது என்பதால், தினசரி விலை ஏற்றம் அடுத்தவாரத்திலிருந்து தொடங்கும்.

5 மாநிலத் தேர்தல் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படாமல் நிலையாக இருந்து வருகிறது. 5 மாநிலத் தேர்தல் வரும் 7ம் தேதியுடன் முடிகிறது, 10ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.அதன்பின் பெட்ரோல், டீசல் விலைஉயர்வை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்.

ஏனென்றால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை முதல்முறையாக 2014ம் ஆண்டுக்குப்பின் பேரல் 110 டாலராகஅதிகரித்துள்ளது. உக்ரைன் ரஷ்யப் போரால் எரிவாயு, கச்சா எண்ணெய் உற்பத்தி ரஷ்யாவில்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தால் விலை உயர்ந்து வருகிறது.

மார்ச்1ம் தேதி நிலவரப்படி இ்ந்தியா வாங்கக்கூடிய கச்சா எண்ணெய் விலை பேரல் 101 டாலராக அதிகரித்துவிட்டது .கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் அதிகபட்ச விலையாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் நிறுத்தியபோது, கச்சா எண்ணெய் விலை பேரல் 81.50டாலராக இருந்தது. தற்போது 20 டாலர் உயர்ந்துவிட்டது என்று பெட்ரோலியம் அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் ஆய்வுக்குழு தெரிவிக்கி்றது

இப்போதுள்ள நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை ஏற்றாமல் இருப்பதால், பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.5, டீசலில் ரூ.7 இழப்பு ஏற்படுகிறது. இதில் எந்தவிதமான லாபமும் கணக்கில் கொள்ளப்படவில்லை.

ஆதலால், தேர்தல் முடிந்தபின், பெட்ரோல், டீசலில் குறைந்தபட்சம் 10 சதவீதம் விலை உயர்வை எதிர்பார்க்கலாம். அதாவது பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.9 டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை உயரும் எனத் தெரிகிறது.

ஒருவேளை கடுமையான விலை ஏற்றத்தை மக்கள் தாங்கமாட்டார்கள் என்று மத்திய அரசு நினைத்தால், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை  லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வரை குறைக்கலாம். அவ்வாறு குறைத்தால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ5 வரை உயர்த்தி இழப்பை ஈடுகட்டும்.

உலகளவில் 3-வது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக ரஷ்யா இருந்தாலும், இ்ந்தியா இறக்குமதி செய்யும் அளவு குறைவுதான். 2021ம் ஆண்டில் தினசரி ரஷ்யாவிலிருந்து 43,400 பேரல்கள் மட்டுமே இந்தியா இறக்குமதி செய்துள்ளது. நிலக்கரி இறக்குமதி 18லட்சம் டன்னாகும், ஆண்டுக்கு 25 மில்லியன் டன் இயற்கைஎரிவாயு இறக்குமதி செய்துள்ளது. 

ஆதலால், இந்தியா நேரடியாக பாதிக்கப்படவாய்ப்பில்லை. ஆனால், சர்வதேசஅளவில் கச்சா எண்ணெயில் ஏற்படும் விலை ஏற்றம் நிச்சமயாக பொருளாதாரத்தில் பாதிப்பை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்