Russia-Ukraine Crisis: உக்ரைனுடன் போர் தொடுப்பது என்ற ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் முடிவால் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கடந்த 30 ஆண்டுகளாக ரஷ்யாவில் முதலீடு செய்திருந்த முதலீட்டை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறுகின்றன.
உக்ரைனுடன் போர் தொடுப்பது என்ற ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் முடிவால் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கடந்த 30 ஆண்டுகளாக ரஷ்யாவில் முதலீடு செய்திருந்த முதலீட்டை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறுகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போர் தொடுத்த நாளில் இருந்து ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா, கனடா, பிரி்ட்டன் என வரிசையாக பல்வேறு தடைகளைவிதித்து வருகின்றன.
வான் வெளிகளை மூடுதல், ரஷ்ய வங்கிகள் ஸ்விப்ஃட் வங்கி பணப்பரிமாற்ற சேவையை பயன்படுத்தவிடாமல் தடுத்தல், அமெரிக்க டாலருக்கு எதிராக ரஷ்யாவின் ரூபிளின் வரலாற்று சரிவு, ரஷ்ய மத்திய வங்கியுடன் பரிமாற்றத்துக்கு அமெரிக்காவின் தடை போன்றவை ரஷ்யாவுக்கு எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களை உண்டாக்கும்
ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட இந்த பொருளாதார, நிதித்தடைகள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சிக்கலாக மாறும் என்பதாலும், ரஷ்யாவை பழிவாங்கவும் பல நிறுவனங்கள் அந்நாட்டை விட்டுவெளியேறும் முடிவை எடுத்துள்ளன.
இது ரஷ்யாவை பொருளாதார ரீதியாகவும், உலகளவிலும் ஒதுக்கிவைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு. இதனால், எதிர்காலத்தில் ரஷ்யாவில் முதலீடு செய்து தொழில் செய்வது கடினம் என்பதாலும், உக்ரைனுக்கு ஆதரவாகவும் மேற்கத்திய நாடுகளைச்ச சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறுகின்றன.
சோவியத் யூனியன் சிதறுண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சந்தை திறக்கப்பட்டபின், ரஷ்யாவில் இருந்த எண்ணெய் மற்றும் இயற்கை வளத்தையும், பெரிய சந்தையையும் பயன்படுத்த ஏராளமான மேற்கத்திய நாடுகளைச்சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்தன.
ரஷ்யாவின் அரசு நிறுவனங்களோடு நீண்டகாலஅடிப்படையில் கூட்டு சேர்ந்து தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஆனால்,உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் ரஷ்யா விட்டு இந்த நிறுவனங்கள் உதறுகின்றன
கடந்த 1990களில் இருந்து அதிகமான முதலீடுகளை வெளிநாடுகளைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள்தான் செய்து வருகின்றன, இந்த நிறுவனங்களின் வெளியேற்றம் ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுக்கும்.
ரஷ்யாவில் மிகப்பெரிய அன்னிய முதலீட்டு நிறுவனமான பிபி பிஎல்சி(BP Plc) நிறுவனம், ரஷ்ய அரசின் ராஸ்நெப்ட் நிறுவத்தில் செய்திருந்த 20 சதவீத முதலீட்டை திரும்பப் பெற்று வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் முடிவால் ரஷ்யாவுக்கு 2500 கோடி டாலர்கள் இழப்பு ஏற்படும். உலகளவில் எண்ணெய்,எரிவாயு உற்பத்தியும் குறையும்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த செயல் அறிவற்றது என விமர்சித்த பிரிட்டனைச் சேர்ந்த ஷெல் நிறுவனமும் ரஷ்யாவை விட்டு வெளியேறுகிறது. ரஷ்யா அரசின் காஸ்ப்ராம் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஷெல் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
ஷகாலின்-2 இயற்கை எரிவாயு திட்டத்திலும் சேர்ந்து ஷெல் நிறுவனம் செயல்பட்டு வந்தது அனைத்திலிருந்து வெளியேறப்போவதாகத் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே நார்த் ஸ்ட்ரீம்2 பைப்லைன் திட்டத்திலிருந்து ஜெர்மன் விலகிக்கொண்டது. இந்தத் திட்டத்தின் மதிப்பு 300 கோடிடாலராகும்.
நார்வே நாட்டின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமான ஈக்வினார் ஏஎஸ்ஏ, ரஷ்யாயில் 1200 கோடி டாலர் முதலீட்டில் அரசு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது. ரஷ்யாவில் தற்போது நிலவும் சூழல் தொழில்செய்யஏற்றதல்ல எனக் கூறி வெளியேறுகிறது
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டோட்டல் எனர்ஜி நிறுவனம் ரஷ்யாவில் மிகப்பெரிய எரிவாயு திட்டத்தில் இணைந்து பணியாற்றி வந்தது. உக்ரைன் போருக்குப்பின், இனிமேல் ரஷ்யாவில் புதிய முதலீடுகள் செய்யும் திட்டமில்லை எனத் தெரிவித்துள்ளது.