
Gold Silver Rate Today: தங்கம் விலை நேற்று அதிரடியாகக் குறைந்தநிலையில் இன்று மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,345ஆகவும், சவரன், ரூ.42,760ஆகவும் இருந்தது.
ஏறியவேகத்தில் இறங்கிய தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூ.5,350ஆகவும், சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 800 ஆக ஏற்றம் அடைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,350க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நாளுக்குநாள் கணிக்க முடியாத நிலையில் மாற்றங்களுடன் நகர்ந்து வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராம் 5,323ரூபாயில் தொடங்கி, இன்று கிராம் ரூ.5,350ல் முடிந்துள்ளது. ஏறக்குறைய கிராமுக்கு ரூ.27 அதிகரித்து, சவரனுக்கு ரூ.216 அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரூ.43 ஆயிரம் வரை உயர்ந்து பின்னர் சரிந்தது.
போக்குகாட்டும் தங்கம் விலை! நகைப்பிரியர்கள் குழப்பம்! இன்றைய நிலவரம் என்ன?
ஒவ்வொரு வாரமும் தங்கத்தின் விலை உயர்ந்து வருவது, நடுத்தர மக்களையும், நகைப்பிரியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளி விலையில் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று நேற்று ரூ.74.60 ஆக இருந்தநிலையில் இன்று கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.74.20ஆகவும், கிலோவுக்கு 400 குறைந்து ரூ.74,200 ஆகவும் சரிந்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.