Gold Price Today: தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் உயர்ந்து நடுத்தரக் குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gold Price Today:தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் உயர்ந்து நடுத்தரக் குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக சவரன் ரூ.43,800 எட்டியுள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாயும், சவரனுக்கு 480 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.616 அதிகரித்தநிலையில் இன்று ரூ.480 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,415ஆகவும், சவரன், ரூ.42,704ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) கிராமுக்கு 60ரூபாய் உயர்ந்து ரூ.5,475ஆகவும், சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து ரூ.43 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,475க்கு விற்கப்படுகிறது.
பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை குறைந்தநிலையில் மாலையில் அனைவருக்கும் ஷாக் அளித்தது.
அமெரி்க்க பெடரல் வங்கியும் வட்டி வீதத்தை 25 புள்ளிகள் உயர்த்தியுள்ள நிலையில், தங்கத்தின் மீதான விலை குறையும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மாறாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.1000க்கு மேல் உயர்ந்து நடுத்தரக் குடும்பத்தினர், நகைப்பிரியர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக சவரன் ரூ.43,800 எட்டியுள்ளது.
வெள்ளி விலையில் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று நேற்று ரூ.76.00 ஆக இருந்தநிலையில் இன்று கிராமுக்கு 1.30 பைசா அதிகரித்து, ரூ.77.30ஆகவும், கிலோவுக்கு 1,300 அதிகரித்து ரூ.77,300 ஆகவும் உயர்ந்துள்ளது