Stock Market Live Today: தொடர் சரிவில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி: அதானி FPO வாபஸ்

By Pothy RajFirst Published Feb 2, 2023, 9:31 AM IST
Highlights

Stock Market Live Today:மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 

Stock Market Live Today: மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் FPO வெளியிட்டீல் பங்குகள் அனைத்தும் விற்பனையான நிலையில் அந்த பங்குகளை மீண்டும் முதலீட்டாளர்களிடமே வழங்க உள்ளது. இது சந்தையில் என்னவிதமான போக்கை ஏற்படுத்தும் என்பது இன்றைய வர்த்தகத்தில் தெரியும்

அமெரிக்க பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் 25 புள்ளிகளை உயர்த்தியுள்ளது. இதனால் 4.50 சதவீதம் இருந்தது 4.75 சதவீதமாக வட்டி உயர்ந்துள்ளது. இந்த வட்டிவீத உயர்வும் சந்தையில் முதலீட்டாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

பட்ஜெட் தாக்கலிலும் பங்குச்சந்தையில் ஊசலாட்டம்: சென்செக்ஸ் உயர்வு: அதானிக்கு ஷாக்

இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை திரும்பப் பெறுவதும் வரும் நாட்களில் அதிகரிக்கலாம். ஆதலால், இன்றைய வர்த்தகத்தில் சரிவு தொடருமா அல்லது, ஊசலாட்டம் இருக்குமா என்பது தெரியவரும்.

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டபோது பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஆனால், பிற்பகலுக்கு பின் சரிந்து முடிவில் சென்செக்ஸ் உயர்ந்தது, நிப்டி சரிந்தது. ஆனால், இன்று காலை முதலே சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி அடைந்துள்ளன.

காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 341 புள்ளிகள் குறைந்து, 59,366 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 133 புள்ளிகள் சரிந்து, 17,482 புள்ளிகளில் வர்த்தகம் நடக்கிறது.

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில் 12 நிறுவனப் பங்குகள் ஏற்றத்திலும், மற்ற பங்குகள் சரிவிலும் உள்ளன. ஐடிசி, மாருதி, இன்போசிஸ், எச்சிஎல், ஏர்டெல், டைட்டன்,டிசிஎஸ்,விப்ரோ உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் உள்ளன.

உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் காலியான கவுதம் அதானி!!

நிப்டியில் ஐடி, எப்எம்சிஜி துறைப் பங்குகள் மட்டுமே லாபத்தில் உள்ளன. எரிசக்தி, பொதுத்துறை வங்கி, வங்கி, உலோகம் உள்ளிட்ட துறைப் பங்குகள் கடும் சரிவில் உள்ளன. 

நிப்டியில் எஸ்பிஐ காப்பீடு, இன்போசிஸ், ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, எச்சிஎல் பங்குகள் லாபத்தில் உள்ளன.அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி லைப், எஸ்பிஐ, யுபிஎல் பங்குகள் சரிவில் உள்ளன

click me!