Adani FPO: அதானி என்டர்பிரைசஸ் FPO திடீர் வாபஸ்: முதலீட்டாளர்களிடம் பணத்தை திரும்ப அளிக்க முடிவு

By Pothy Raj  |  First Published Feb 2, 2023, 9:51 AM IST

Adani Enterprises FPO:அதானி குழுமத்தின் சார்பில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.20ஆயிரம் கோடிக்கு FPO(பொதுப்பங்குகள்) வெளியிட்டு அனைத்தும் விற்றநிலையில் அதை திரும்பப் பெற்று  முதலீட்டாளர்களிடம் பணத்தை திரும்ப வழங்க முடிவு செய்துள்ளது.


Adani Enterprises FPO:அதானி குழுமத்தின் சார்பில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.20ஆயிரம் கோடிக்கு FPO(பொதுப்பங்குகள்) வெளியிட்டு அனைத்தும் விற்றநிலையில் அதை திரும்பப் பெற்று  முதலீட்டாளர்களிடம் பணத்தை திரும்ப வழங்க முடிவு செய்துள்ளது.

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எப்பிஓ வெற்றிகரமாக முடிந்து, அனைத்துப் பங்குகளும் விற்றது என்று அறிவிக்கப்பட்ட அடுத்த நாளில் இந்த முடிவை அதானி குழுமம் எடுத்துள்ளது.

Tap to resize

Latest Videos

எதிர்கால இந்தியாவுக்கு முதல்படி.. மத்திய அரசின் 2023ம் ஆண்டு பட்ஜெட் குறித்து அப்போல்லோ பிரதாப் சி.ரெட்டி

அதானி என்டர்பிரைசஸ் நிறுவன் பொதுப் பங்குகளை ரூ.20ஆயிரம் கோடிக்கு வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்தது. இதன்படி கடந்த மாதம் கடைசி 3 நாட்கள் எப்பிஓ விற்பனை நடந்தது. 

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் 4.62 கோடி பங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட நிலையில் அதில் 4.55 கோடி பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. நிறுவனமில்லாத முதலீ்ட்டாளர்கள், இந்திய முதலீட்டாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிக அதிகாக 96.16 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளனர். 

1.28 கோடி பங்குகள் தகுதிவாய்ந்த நிறுவன முதலீ்ட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டநிலையி்ல் அனைத்தும் விற்பனையானது என்று பங்குசந்தையில் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சில்லறை முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பங்குகள் விற்பனைக்கு வரவேற்பு இல்லை. சில்லறை விற்பனைாளர்களுக்கு 2.29 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டன, ஊழியர்களுக்கு 1.60 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. 

பட்ஜெட் தாக்கலிலும் பங்குச்சந்தையில் ஊசலாட்டம்: சென்செக்ஸ் உயர்வு: அதானிக்கு ஷாக்

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த வாரம் அதானி குழுமம் பற்றி அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்குப்பின் அதானி குழுமத்தின் பங்குகள் 20 சதவீதம் சரிந்தன. 

கடந்த 10 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த மோசடிகள், தில்லுமுல்லு, பொய்கணக்கு, பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தியது உள்ளிட்டவற்றை வெளிச்சம்போட்டு காட்டி அறிக்கை வெளியிட்டது. 

இந்த அறிக்கை வெளியானதில் இருந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் அனைத்தும் ஆட்டம் கண்டன. 3 நாட்களில் அதானி குழுமப் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் சரிந்தது, ஏறக்குறைய அதானி குழுமத்துக்கு ரூ.5.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எப்பிஓ நடப்பதால், பெரிதாக முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்று கருதப்பட்டது. இந்நிலையில் எப்பிஓ விற்பனை முடிந்தநிலையில் அனைத்து பங்குகளும் ஏறக்குறைய விற்பனையானது. 

உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் காலியான கவுதம் அதானி!!

இந்நிலையில் திடீரென அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் எப்பிஓ-அறிவிப்பை திரும்பப் பெறுவதாகவும், முதலீட்டாளர்களிடம் பணத்தை ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் “ அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் எப்பிஓ- முன்னெடுத்துச் செல்லவில்லை என்று முடிவு செய்துள்ளது. சந்தையில் நிலவும் கடும் ஊசலாட்டம், இதுவரை சந்தித்திராத சூழல் ஆகியவை காரணமாக, முதலீட்டாளர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளது. அனைத்து பரிமாற்றங்களையும் திரும்பப் பெறுகிறது” எனத் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு இதுவரை 38சதவீதம் சரிந்துளளது. கடந்த 5 நாட்களி்ல் மட்டும் ரூ.7 லட்சம் கோடியை அதானி குழுமம் இழந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு மதிப்பும் 28 சதவீதம் சரிந்து ரூ,2,128.70ஆகக் குறைந்தது.

click me!