Gold Rate:தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது! மக்கள் குழப்பம்! இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Feb 3, 2023, 10:53 AM IST
Highlights

gold rate chennai today:தங்கம் விலை நேற்று வரலாறு காணாத அளவு உயர்ந்து அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் இன்று ஏறிய வேகத்தில் விலை குறைந்துள்ளது.

gold rate chennai today:தங்கம் விலை நேற்று வரலாறு காணாத அளவு உயர்ந்து அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் இன்று ஏறிய வேகத்தில் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாயும், சவரனுக்கு 520 ரூபாயும் விலை குறைந்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,505ஆகவும், சவரன், ரூ.44,040ஆகவும் இருந்தது.

தங்கம் விலை வரலாற்று உச்சம் ! சவரன் ரூ.44 ஆயிரத்தை எட்டியது: மிடில் கிளாஸ் மக்கள் கலக்கம்

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வெள்ளிக்கிழமை) கிராமுக்கு 65ரூபாய் சரிந்து ரூ.5,440ஆகவும், சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து ரூ.43 ஆயிரத்து 520 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,440க்கு விற்கப்படுகிறது.

பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் மளமளவென தங்கம் விலை அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை, சவரனுக்கு ரூ.1300வரை உயர்ந்தது.

இதனால் நடுத்தர மக்கள்,நகைப் பிரியர்கள் கடும் கலக்கநிலைக்கு சென்றனர். தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா அல்லது எப்போது குறையும் என்ற குழப்பமான நிலைக்குச் சென்றனர்.

ஆனால், நேற்று கிராமுக்கு 76 வரை உயர்ந்த தங்கம் விலை இன்று அதிரடியாக ஏறிய வேகத்தில் இறங்கியுள்ளது. 

தங்கம் விலை வரலாற்று உயர்வு! சவரன் ரூ.44ஆயிரத்தை நெருங்குகிறது! வெள்ளி விர்ர்! நிலவரம் என்ன

வெள்ளி விலையில் இன்று அதிரடியாக வீழ்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று நேற்று ரூ.77.80 ஆக இருந்தநிலையில் இன்று கிராமுக்கு 1.40 பைசா குறைந்து, ரூ.76.40ஆகவும்,  கிலோவுக்கு ரூ.1,400 குறைந்து ரூ.76,400 ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

click me!