Stock Market Today: பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்: அதானி குழும பங்குகள் தொடர் சரிவு

By Pothy RajFirst Published Feb 3, 2023, 9:40 AM IST
Highlights

Stock Market Today:இந்தியப் பங்குச்சந்தையில் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Stock Market Today: இந்தியப் பங்குச்சந்தையில் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சர்வதேச காரணிகள் சாதகமாக இருப்பது, அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் எதிர்பார்த்த அளவு வட்டியை உயர்த்தாமல் இருந்ததால் அமெரி்க்கச் சந்தை நேற்று ஏற்றத்துடன் முடிந்தன.

Stock Market:பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்! சென்செக்ஸ் உயர்வு, நிப்டி சரிவு! வீழ்ச்சியில் அதானி பங்குகள்

இதன் எதிரொலியாக ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா பங்குச்சந்தைகளும் ஏற்றத்துடன் உள்ளன. இந்த காரணிகளால் இந்திய முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்து வர்த்தகத்தை உற்சாகமாகத் தொடங்கியுள்ளனர்.

கடந்த 3 நாட்களாக பங்குச்சந்தையில் கடும் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. குறிப்பாக அதானி குழுமத்தின் பங்குகள் சரிவு பங்குச்சந்தையில் பெரிய அளவிலான ஊசலாட்டத்துக்கு காரணமாக இருந்து வருகிறது. இன்று காலை வர்த்தகத்திலும் அதானி என்டர்பிரைசர்ஸ் பங்குகள் 10 சதவீதம் சரிந்தன. 

சர்வதேச சூழல் சாதகமாக இருக்கும் நிலையில் உள்நாட்டு சூழல் காரணமாகவே பங்குச்சந்தை ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது. இன்று முக்கிய நிறுவனங்களான எஸ்பிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, மகிந்திரா அன்ட் மகிந்திரா, மணப்புரம் பைனான்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், ஜேகே டயர், சன்டிவி நெட்வொர்க் உள்ளிட்டபல நிறுவனங்களின் 3வது காலாண்டு முடிவுகள் வெளியாவதால் பங்குச்சந்தையில் காலை முதலே பரபரப்புடன் காணப்படுகிறது

தொடர் சரிவில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி: அதானி FPO வாபஸ்

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 441 புள்ளிகள் உயர்ந்து, 60,335 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 89 புள்ளிகள் அதிகரித்து, 17,699 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில் 6 நிறுவனங்களின் பங்குகளைத் தவிர 24 நிறுவனங்களின் பங்குகுள் லாபத்தில் உள்ளன. அல்ட்ராடெக் சிமெண்ட், எச்சிஎல், டெக்மகிந்திரா, கோடக் வங்கி, பவர்கிரிட், நெஸ்ட்லே இந்தியா உள்ளிட்டபங்குகள் விலை சரிந்துள்ளன.

நிப்டியில், இன்டஸ்இன்ட் வங்கி, டைட்டன், எஸ்பிஐ காப்பீடு, எஸ்பிஐ வங்கி, லார்சந் அன்ட் டூப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் உள்ளன. அதானி என்டர்பிரைசர்ஸ், அதானிபோர்ட்ஸ், டிவிஸ் லேப்ஸ், ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ் பங்குள் சரிந்துள்ளன.


 

click me!